ஒன்றல்ல.. இரண்டல்ல.. 8 படங்கள் ரிலீஸ்.. பொங்கல் தினத்தில் சினிமா ரசிகர்களுக்கு கொண்டாட்டம்..!
- IndiaGlitz, [Thursday,January 02 2025]
பொங்கல் தினத்தில் ரிலீஸ் ஆக வேண்டிய அஜித்தின் 'விடாமுயற்சி’ திரைப்படம் பின்வாங்கியதை அடுத்து பொங்கல் தினத்தில் அடுத்தடுத்து ரிலீஸ் ஆகும் படங்கள் குறித்து அறிவிப்பு வெளியானது. இந்த நிலையில் தற்போது வந்துள்ள தகவல் படி பொங்கல் தினத்தில் எட்டு படங்கள் ரிலீஸ் ஆக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
பொங்கல் தினத்தைப் பொறுத்தவரை பாலாவின் 'வணங்கான்’ மற்றும் ஷங்கரின் ’கேம் சஞ்சர்’ ஆகிய இரண்டு திரைப்படங்கள் ஏற்கனவே ரிலீஸ் ஆகும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில் தற்போது கேப்டன் விஜயகாந்த் மகன் சண்முக பாண்டியன் நடித்த ’படைத்தலைவன்’ கிருத்திகா உதயநிதி இயக்கத்தில் ஜெயம் ரவி நடிப்பில் உருவான 'காதலிக்க நேரமில்லை’ வாலி மோகன் தாஸ் இயக்கத்தில் மலையாள நடிகர் ஷான் நிகாம் மற்றும் கலையரசன் நடித்த ’மெட்ராஸ்காரன்’ மற்றும் விஷ்ணுவர்தன் இயக்கத்தில் ஆகாஷ் முரளி நடிப்பில் உருவான ’நேசிப்பாயா’ ஆகிய படங்கள் பொங்கல் தினத்தில் வெளியாகிறது.
அதேபோல் சிபி சக்கரவர்த்தி நடித்த ’டென் அவர்ஸ்’ மற்றும் ’2கே லவ் ஸ்டோரி’ ஆகிய படங்களும் வெளியாகவுள்ளது. பொங்கல் தினத்தில் 8 படங்கள் ரிலீஸ் ஆக இருப்பதை அடுத்து சினிமா ரசிகர்களுக்கு கொண்டாட்டம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.