ஆபாச வீடியோ தொடர்பான வழக்கில் பிரபல நடிகை கைது!
- IndiaGlitz, [Monday,February 08 2021]
மும்பை பகுதியில் நடத்தப்பட்ட போலீஸ் விசாரணையில் ஆபாச வீடியோ எடுத்து அதை இணையத்திலும் செல்போன்களிலும் பரப்பிய குற்றத்திற்காக நடிகை கெஹானா வசிஸ்த் கைது செய்யப்பட்டு உள்ளார். இவர் தமிழில் “பேய்கள் ஜாக்கிரதை“ படத்தின் ஒரு பாடலுக்கு கவர்ச்சி நடனம் ஆடி இருந்தார்.
பாலிவுட்டில் முதன் முதலாக “filmy duniya“ எனும் படத்தில் கதாநாயகியாக அறிமுகமான நடிகை கெஹானா தெலுங்கில் கிட்டத்தட்ட 19 படங்களில் நடித்து இருக்கிறார். மேலும் பிரபல டிவி தொலைக்காட்சி நிகழ்ச்சிகள், விளம்பரப் படங்கள் மற்றும் வெப் சிரீயல்களிலும் இவர் நடித்து உள்ளார். தற்போது மும்பையின் மலாத் தீவு அருகே உள்ள மாத் எனும் இடத்தில் போலீசார் திடீர் விசாரணை நடத்தியபோது ஒரு வீட்டில் ஆபாசப்படம் எடுப்பது கண்டுபிடிக்கப் பட்டது.
அதையடுத்து இதில் தொடர்புடையவர்களை போலீசார் விசாரணை செய்தபோது நடிகை கெஹானா பணிக்கு வேலை ஆட்களை அமர்த்தி ஆபாச விடீயோக்களை எடுத்து அதை இணையத்தில் பதிவிட்டு வருகிறார் என்பதை கண்டுபிடித்து உள்ளனர். இதுவரை 87 ஆபாச விடீயோக்களை நடிகை கெஹானா இணையத்தில் பதிவிட்டு இருப்பதாகவும் இந்த வீடியோக்களை பார்ப்பதற்காக தனி வெப்சைட் ஆரம்பித்து இருப்பதும் தெரிய வந்துள்ளது. இதுதொடர்பாக குற்றச்சாட்டில் ஒரு பெண் உட்பட இதுவரை 7 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.
ஆபாச வீடியோ வழக்கில் தற்போது நடிகை கெஹானா கைது செய்யப்பட்டு உள்ளதை அடுத்து, தங்களை கட்டாயப்படுத்தி ஆபாச வீடியோ எடுத்தார் என இவர் மீது 3 பெண்கள் குற்றம் சாட்டியுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. இச்சம்பவத்தை அடுத்து இணையத்தில் பதிவிடப்பட்ட ஆபாச வீடியோக்கள் அழிக்கப்பட்டதோடு 3 வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டு உள்ளன. இந்த வங்கிக் கணக்குகளில்தான் நடிகை கெஹானா தலா 2000 ரூபாய் என ஆபாச வீடியோவிற்கு கட்டணம் வசூலித்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.