என்ன வேதனையோ? செல்போனை விழுங்கிவிட்டு 6 மாதமாக தவித்த இளைஞர்!
- IndiaGlitz, [Thursday,October 21 2021]
எகிப்து நாட்டில் செல்போனை விழுங்கிய இளைஞர் ஒருவருக்கு அறுவை சிகிச்சை மூலம் மருத்துவர்கள் செல்போனை அகற்றியுள்ளனர். அதிலும் அந்த இளைஞர் கடந்த 6 மாதங்களாக வயிற்றுக்குள் செல்போனை வைத்துக் கொண்டு இருந்தது பலருக்கும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தி இருக்கிறது.
எகிப்திலுள்ள அஸ்வன் மருத்துவமனைக்கு கடந்த சில தினங்களுக்கு முன்பு கடும் வயிற்று வலியுடன் இளைஞர் ஒருவர் வந்துள்ளார். அந்த இளைஞருக்கு ஸ்கேன் மற்றும் எக்ஸ்ரே எடுத்த மருத்துவர்கள் அந்த ரிப்போர்ட்டை பார்த்து குழம்பியுள்ளனர். காரணம் இளைஞரின் வயிற்றில் செவ்வக வடிவில் ஏதோ ஒரு பொருள் இருந்திருக்கிறது. இதனால் உடனடியாக அறுவை சிகிச்சை செய்து அந்தப் பொருளை அகற்றியும் இருக்கின்றனர்.
அந்தப் பொருள் என்னவென்று தெரிந்த பிறகுதான் மருத்துவர்களுக்கு கடும் அதிர்ச்சி ஏற்பட்டு இருக்கிறது. இதுகுறித்து இளைஞரிடம் கேட்டபோது கடந்த 6 மாதங்களுக்கு முன்பு தெரியாமல் விழுங்கிவிட்டதாகவும் பின்னர் தான் அதை கண்டுகொள்ளவே இல்லை என்றும் தெரிவித்து உள்ளார். இளைஞரின் பதிலை கேட்டு மருத்துவர்களே அதிர்ந்துபோயுள்ளனர்.
இதேபோல ஒரு சம்பவம் கடந்த செப்டம்பர் மாதத்தில் கோசாவா நாட்டில் நடைபெற்றது. நோக்கியா மாடல் செல்போனை விழுங்கிவிட்டு இளைஞர் ஒருவர் தனக்கு ஜீரணம் ஆகவில்லை என்று மருத்துவமனைக்கு வந்த சம்பவம் பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.