ஊனமாக நடித்து பிச்சை எடுத்த பெண்மணி… சொத்து மதிப்பை கேட்டு வாயை பிளந்த போலீசார்!!!

  • IndiaGlitz, [Thursday,October 29 2020]

 

எகிப்து நாட்டில் வீல்சேரில் அமர்ந்து பிச்சை எடுக்கும் பெண்மணி ஒருவருக்கு 5 மாடிக்கொண்ட ஒரு அடுக்குமாடி கட்டிடம் ஒன்று சொந்தமாக இருப்பதாகவும் அதோடு அவரது வங்கி கணக்கில் 1.5 கோடி பணம் இருப்பதாகவும் தெரிய வந்துள்ளது. இதை அறிந்த போலீசார் கடும் அதிர்ச்சி அடைந்து மேலும் அவரிடம் விசாரணை மேற்கொண்டு வருவதாகக் கூறப்படுகிறது.

எகிப்து நாட்டில் வசிந்து வரும் நபிஷா எனும் பெண்மணிக்கு தற்போது 57 வயது. தன்னுடைய 27 வயதில் கணவனால் கைவிடப்பட்ட இவர் கடந்த 30 வருடங்களாக பிச்சை எடுத்து வருகிறார். இந்நிலையில் கடந்த சில வருடங்களுக்கு முன்பு அவரது காலில் சிறு கோளாறு ஒன்று ஏற்பட்டு இருக்கிறது. அந்த சமயத்தில் நபிஷா வில்சேரை பயன்படுத்தி இருக்கிறார். வீல்சேரில் அமர்ந்து பிச்சை எடுத்த போது அவருக்கு மேலும் அதிகமாக பணம் கிடைத்து இருக்கிறது. அதைத் தொடர்ந்து கடந்த 10 வருடங்களாக நபிஷா வீல்சேரில் அமர்ந்தே பிச்சை எடுத்து வருவதாகக் கூறியுள்ளார்.

போலீசார் இவரது நடத்தையில் சந்தேகம் அடைந்து நபிஷாவை விசாரித்தபோது மேலும் பல அதிர்ச்சி தகவல்கள் கிடைத்து இருக்கின்றன. அதில் கடந்த 30 வருடங்களாக பிச்சை எடுத்து வந்த பணத்தை இவர் வங்கியில் போட்டு வைத்திருப்பதாகக் கூறியுள்ளார். அந்த வகையில் அவருடைய வங்கி கணக்கில் 1.5 கோடி பணம் இருப்பதும் தெரிய வந்துள்ளது.

மேலும் இவருக்கு சொந்தமாக 5 மாடிக்கொண்ட ஒரு அடுக்குமாடி கட்டிடம் இருப்பதையும் விசாரணையில் போலீசார் கண்டுபிடித்து உள்ளனர். இந்த அடுக்குமாடி கட்டிடத்தை வாடகைக்கு விட்டு அதிலும் அந்தப் பெண்மணி சம்பாதித்து வந்திருக்கிறார். இந்தத் தகவல் தற்போது எகிப்து நாட்டில் கடும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.