பார்ட்டியில் குத்தாட்டம் போட்ட இளம்பெண்ணுக்கு அதிரடி சிறை தண்டனை!!
Send us your feedback to audioarticles@vaarta.com
எகிப்தில் நடந்த பிரமாண்ட பார்ட்டியில் ஆபாச நடனமாடிய பெண்ணுக்கு அந்நாட்டு அரசு சிறை தண்டனை வழங்கியுள்ளது.
ரஷ்யாவைச் சேர்ந்த ஆண்ட்ரியவா என்கிற இளம்பெண் சமீபத்தில்,
எகிப்தில் நடைபெற்ற, பிரமாண்ட பார்ட்டி நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டார். அப்போது போதையில்... அரைகுறை ஆடையுடன், ஆபாச குத்தாட்டம் போட்டு அனைவருடைய பார்வையையும் கவர்ந்தார்.
சிலர் இவரின் கிளுகிளுப்பு நடனத்தை, வீடியோ எடுத்து, இந்தகாட்சியை இணையதளத்தில் வெளியிட்டனர். இதனால் இவரின் நடன காட்சிகள் வைரலாக பரவியது.
இதைத்தொடர்ந்து இவர், எகிப்து நாட்டின் நன்மதிப்பை சீர்குலைக்கும் விதமாக, நடந்து கொண்டதாக கூறி, எகிப்து நாட்டினர் ஆண்ட்ரியவா மீது போலீசில் புகார் கொடுத்தனர்.
இதனால் ஆண்ட்ரியவா மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில், இவருக்கு ஒரு வருட சிறை தண்டனை விதித்து அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது எகிப்து நீதிமன்றம்.
எகிப்தில் பெண்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வரும் நிலையில், அதனை தகர்க்கும் விதமாக நடந்துகொண்டதால், இந்த பெண்ணிற்கு இப்படி ஒரு தண்டனை வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Iniya Vaishnavi
Contact at support@indiaglitz.com