கைது செய்யப்பட்ட ஆசிரியர் ராஜகோபாலன்: நீதிமன்றம் பிறப்பித்த அதிரடி உத்தரவு

  • IndiaGlitz, [Tuesday,May 25 2021]

சென்னை பத்மா சேஷாத்ரி பள்ளி ஆசிரியர் ராஜகோபாலன் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக நேற்று கைது செய்யப்பட்ட நிலையில் அவரிடம் விடிய விடிய விசாரணை நடந்தது

இந்த விசாரணையில் அவர் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததை ஒப்புக்கொண்டார். இதனை அடுத்து அவரை கைது செய்த காவல்துறையினர் அவர் மீது 5 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்தனர்

இதனை அடுத்து சற்றுமுன் அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில் அவரை 14 நாட்கள் காவலில் வைக்க சென்னை எழும்பூர் நீதிபதி உத்தரவு பிறப்பித்துள்ளார். இதனையடுத்து அவருக்கு ஜூன் 8ஆம் தேதி வரை சிறையில் அடைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

இந்த நிலையில் பாலியல் புகாரில் ஆசிரியர் ராஜகோபாலன் செய்யப்பட்டுள்ளதை அடுஹ்து பத்ம சேஷாத்ரி பள்ளி நிர்வாகத்திற்கு தமிழ்நாடு குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் சம்மன் அனுப்பி நிர்வாகத்திடமும், மற்ற ஆசிரியர்களிடம் விசாரிக்க திட்டமிட்டு இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

More News

நாளை முதல் ஃபேஸ்புக், டுவிட்டருக்கு தடையா? அதிர்ச்சி தகவல்!

புதிய சமூக வலைதள விதிகளுக்கு கட்டுப்படாமல் இருக்கும் ஃபேஸ்புக், ட்விட்டர் போன்ற சமூக வலைதளங்களுக்கு நாளை முதல் தடை விதிக்கப்படுமா? என்று கேள்வி எழுந்துள்ளது 

சிவகார்த்திகேயன் கொடுத்த செக்-கில் இதனை கவனித்தீர்களா?

கொரோனா வைரஸ் ஊரடங்கு காரணமாக நலிந்த நடிகர்களுக்கு ரூபாய் ஒரு லட்சம் நடிகர் சிவகார்த்திகேயன் கொடுத்தார் என்பதை ஏற்கனவே பார்த்தோம்.

ஆசிரியர் ராஜகோபாலன் மீது பாய்ந்தது போக்சோ: மேலும் சில ஆசிரியர்கள் கைதா?

பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக பத்மா சேஷாத்ரி பள்ளி ஆசிரியர் ராஜகோபாலன் கைது செய்யப்பட்டு இருக்கிறார். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் மாணவிகளிடம்

இதுவே எனது பிறந்த நாள் பரிசு: ரசிகர்களுக்கு நடிகர் கார்த்தி வேண்டுகோள்

தமிழ் திரை உலகின் பிரபல நடிகர் கார்த்தி இன்று தனது பிறந்தநாளை கொண்டாடி வரும் நிலையில் அவருக்கு சக நடிகர் நடிகைகள் மற்றும் ரசிகர்கள் சமூக வலைதளங்கள் மூலம் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

5 ஆண்டுகளாக பாலியல் தொந்தரவா? ஆசிரியர் ராஜகோபாலன் வாக்குமூலத்தில் திடுக்கிடும் தகவல்!

சென்னை பத்மா சேஷாத்திரி பள்ளியில் ராஜகோபாலன் என்ற ஆசிரியர் மாணவிகளை பாலியல் தொந்தரவு செய்ததாக எழுந்த புகாரை அடுத்து