'ஈரம்' இயக்குனரின் அடுத்த படம்.. அதே திகில்.. அதே சஸ்பென்ஸ்.. 'சப்தம்' டீசர்..!
Send us your feedback to audioarticles@vaarta.com
கடந்த 2009 ஆம் ஆண்டு வெளியான ’ஈரம்’ என்ற திரைப்படத்தை இயக்கிய இயக்குனர் அறிவழகன் இயக்கி உள்ள அடுத்த திரைப்படமான ’சப்தம்’ என்ற திரைப்படத்தின் டீசர் சற்றுமுன் வெளியாகியுள்ளது. இயக்குனர் வெங்கட் பிரபு வெளியிட்டுள்ள இந்த டீசரில் ’ஈரம்’ திரைப்படத்தில் பார்த்த அதே திகில் அதே சஸ்பென்ஸ் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
’ஈரம்’ திரைப்படத்தில் நடித்த ஆதி இந்த படத்திலும் நாயகனாக நடித்துள்ள நிலையில் முக்கிய வேடங்களில் சிம்ரன், லைலா, லட்சுமி மேனன், ரெடின் கிங்ஸ்லி, எம்எஸ் பாஸ்கர், ராஜிவ் மேனன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
அறிவழகன் இயக்கத்தில், தமன் இசையில், அருண் பத்மநாபன் ஒளிப்பதிவில், சபு ஜோசப் படத்தொகுப்பில் இந்த படம் உருவாகியுள்ளது. இந்த படத்தின் ஒரு நிமிடத்திற்கு மேலான டீசரில் முழுக்க முழுக்க சஸ்பென்ஸ் மற்றும் திகில் காட்சிகள் இருப்பதை அடுத்து நிச்சயம் இந்த படமும் ’ஈரம்’ படம் போலவே வெற்றி படமாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் இந்த படம் வரும் கோடை விடுமுறையில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. நீண்ட இடைவெளிக்கு பிறகு லட்சுமி மேனன் நடித்திருக்கும் இந்த படம் அவருக்கு திரையுலகில் ஒரு ரீஎண்ட்ரி கொடுக்குமா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
Delighted to release teaser for #Sabdham,a thrilling sound-based horror film, is out now✨
— venkat prabhu (@vp_offl) April 12, 2024
Congratulations to the entire team for creating this masterpiece. Get ready for a scream-worthy experience✨
Link: https://t.co/kXCSdzWX7A
Starring @AadhiOfficial
Directed by… pic.twitter.com/V3972Nb2u5
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com