'ஈரம்' அறிவழகனின் அடுத்த படம்.. அட்டகாசமான ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர்
Send us your feedback to audioarticles@vaarta.com
ஆதி நடித்த 'ஈரம்’ என்ற படத்தின் மூலம் திரையுலகில் இயக்குனராக அறிமுகமான இயக்குனர் அறிவழகன் இயக்கும் அடுத்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி உள்ள நிலையில் அந்த போஸ்டர் தற்போது வைரலாகி வருகிறது.
கடந்த 2009ஆம் ஆண்டு 'ஈரம்’ என்ற திரைப்படத்தின் மூலம் திரையுலகிற்கு இயக்குனராக அறிமுகமானார் இயக்குனர் அறிவழகன். அதன்பின் அவர் ’வல்லினம்’ ’ஆறாது சினம்’ ’குற்றம் 23’ ஆகிய படங்களை இயக்கினார் என்பதும், தற்போது அவர் இயக்கி முடித்துள்ள அருண்விஜய்யின் ’பார்டர்’ என்ற திரைப்படம் விரைவில் ரிலீசாக உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் இயக்குனர் அறிவழகன் இயக்கும் அடுத்த திரைப்படம் ’சப்தம்’ என்ற டைட்டிலுடன் உருவாக்கப்பட்டு வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தனது முதல் பட நாயகன் ஆதி இந்த படத்தில் ஹீரோவாக நடிக்கிறார் என்றும் இந்த படத்திற்கு இசையமைப்பாளர் தமன் இசையமைக்கிறார் என்றும் அறிவழகன் தனது சமூக வலைத்தளத்தில் அறிவித்துள்ளார்.
மேலும் 7ஜி பிலிம்ஸ் சிவா மற்றும் ஆல்பா பிரேம்ஸ் ஆகிய நிறுவனங்கள் இந்த படத்தை தயாரிக்க இருப்பதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வித்தியாசமாக இருப்பதை அடுத்து இந்த போஸ்டர் தற்போது இணையதளங்களில் வைரலாக வருகிறது.
Yes, #Sabdham - is my next with my Special Genre after #Eeram that too with same combo of My Dear Hero Cum Birthday Boy @AadhiOfficial Bro ?? & @MusicThaman Buddy ?? under @7GFilmsSiva & @Aalpha_frames production. The tag is ‘the Sound that’s Never Heard’ pic.twitter.com/h9NXLdVItJ
— Arivazhagan (@dirarivazhagan) December 14, 2022
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com