'ஈரம்' பட நாயகி சிந்து மேனனா இவர்? கணவர் குழந்தைகளுடன் க்யூட் புகைப்படங்கள்..!

  • IndiaGlitz, [Tuesday,March 07 2023]

இயக்குனர் அறிவழகன் இயக்கத்தில் ஆதி, நந்தா நடிப்பில் உருவான ’ஈரம்’ திரைப்படத்தில் முக்கிய கேரக்டரில் நடித்த சிந்து மேனனின் கணவர் மற்றும் குழந்தைகளின் புகைப்படம் தற்போது இணையதளங்களில் வைரல் ஆகி வருகிறது.

நடிகை சிந்து மேனன் பல கன்னடம் மற்றும் தெலுங்கு, மலையாள திரைப்படங்களில் நடித்த நிலையில் சரத்குமார் நடித்த ’சமுத்திரம்’ என்ற திரைப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார். அதன் பிறகு அவர் நடித்த ’காதல் பூக்கள்’ ’யூத்’ ஆகிய படங்கள் நல்ல வரவேற்பு பெற்ற நிலையில் 2009 ஆம் ஆண்டு ’ஈரம்’ என்ற படத்தில் நாயகியாக நடித்தார்

இந்த படம் அவருக்கு மிகப்பெரிய நல்ல பெயரை பெற்று கொடுத்தாலும் அதன் பிறகு அவருக்கு வேறு பெரிய திரைப்பட வாய்ப்புகள் கிடைக்கவில்லை. இந்த நிலையில் கடந்த 2003 ஆம் ஆண்டு பிரபு என்பவரை திருமணம் செய்து கொண்ட சிந்து மேனனுக்கு ஒரு மகள் மற்றும் இரண்டு மகன்கள் உள்ளனர்.

நடிகை சிந்து மேனன் ஒரு பரதநாட்டிய கலைஞர் என்பதும் அவர் சிறு வயதில் இருந்தே குழந்தை நட்சத்திரமாக கன்னடத்திரையுலகில் பல திரைப்படங்களில் நடித்துள்ளார் என்பதும், மேலும் அவர் தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

More News

இயக்குனர் நெல்சனுக்கு ஆச்சரிய பரிசு கொடுத்த 'ஜெயிலர்' நடிகர்.. வைரல் புகைப்படம்..!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த வரும் 'ஜெயிலர்' திரைப்படத்தில் முக்கிய கேரக்டரில் நடித்து வரும் இயக்குனர் நெல்சனுக்கு பாலிவுட் நடிகர் அளித்த ஆச்சரியமான பரிசு குறித்த புகைப்படம் இணையதளங்களில் வைரல்

தனுஷ் உடன் இணையும் மாஸ் நடிகர்.. பிரமாண்ட படத்தின் இயக்குனர் இவரா?

கடந்த சில வருடங்களாக  தென்னிந்திய திரைப்படங்களில் இரண்டு மாஸ் நடிகர்கள் அல்லது இரண்டுக்கும் மேற்பட்ட மாஸ் நடிகர்கள் நடிக்கும் படங்கள் அதிகமாக வெளியாகி வருகின்றன

ஜெயம் ரவி, ஆர்யா பட நாயகியா இவர்?  கணவர் குழந்தைகளுடன் உள்ள அழகிய புகைப்படங்கள்...!

 ஜெயம் ரவி, ஆர்யா படங்களில் நாயகி ஆக நடித்த நடிகை கணவர் மற்றும் குழந்தைகளுடன் உள்ள புகைப்படம் இணையதளங்களில் வைரல் ஆகி வருகிறது. 

வேலை வாங்கி தருவதாக கோடிக்கணக்கில் மோசடி.. கவர்ச்சி நடிகையின் சகோதரி கைது..!

வேலை வாங்கித் தருவதாக கோடிக்கணக்கில் மோசடி செய்ததாக கவர்ச்சி நடிகையின் சகோதரி காவல்துறையினரால் கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

இன்று முதல் 'லால் சலாம்' படப்பிடிப்பு.. யார் யார் கலந்து கொண்டார்கள் தெரியுமா?

ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் உருவாகும் 'லால் சலாம்' என்ற திரைப்படத்தின் அறிவிப்பு சமீபத்தில் வெளியான நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு இன்று முதல் தொடங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன.