தொலைக்காட்சி வழியே கல்வி… கொரோனா காலத்தில் இந்தியாவிற்கே முன்னோடியாக விளங்கும் தமிழக அரசு!!!
Send us your feedback to audioarticles@vaarta.com
கொரோனா ஊரடங்கால் இந்தியா முழுவதும் பள்ளி, கல்லூரி நிறுவனங்கள் திறக்கப்படாமல் இருக்கின்றன. இந்நிலையில் பள்ளி, கல்லூரிகளுக்கான பாடத்திட்டங்களை ஆன்லைனில் நடத்தும் ஏற்பாடுகளை கல்வி நிறுவனங்கள் மேற்கொண்டு வருகின்றன. ஆனால் இணையவசதி இல்லாத, விளிம்பு நிலையில் இருக்கும் பல லட்சக்கணகக்கான குழந்தைகளின் கல்வி தற்போது கேள்விக்குறியாகி இருக்கிறது. இதனால் பல மாநிலங்களில் தொடர்ந்து பள்ளிப் பாடங்களைக் கவனிக்க முடியாத நிலைமைகூட ஏற்பட்டு இருக்கிறது. ஆனால் தமிழகத்தில் இந்நிலைமை சீராக உள்ளதாகக் கூறப்படுகிறது.
தமிழகத்தில் கல்வி எனும் தொலைக்காட்சி வழியாக மாணவர்களுக்கு பயிற்சி வகுப்புகளை நடத்தும் பணி கடந்த ஆண்டு முதல் நடைபெற்று வருகிறது. தற்போது கொரோனா ஊரடங்கு காலத்தில் இந்தத் தொலைக்காட்சி வழியாக அனைத்து வகுப்பு பாடங்களையும் மாணவர்களுக்கு மிகவும் எளிமையான முறையில் நடத்தும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதனால் தமிழகம் கல்வி முறையில் இந்திய அளவில் முன்னோடியாக விளங்குகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது. மாணவர்களின் கல்வி நலனைக் கருத்தில்கொண்டு இத்திட்டத்தை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி துவக்கி வைத்ததோடு மேலும் இத்திட்டத்தை மேம்படுத்தும் பல்வேறு முயற்சிகளையும் மேற்கொண்டு வருகிறார்.
தமிழக மாணவர்களுக்கு தொலைக்காட்சி வழியாக பாடம் கற்பிக்கும் வகையில் கடந்த 2019 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 26 ஆம் தேதி கல்வி எனும் தொலைக்காட்சி நிறுவனத்தை தமிழக முதல்வர் தொடங்கி வைத்தார். தற்போது இந்த தொலைக்காட்சி நிறுவனம் தொடங்கப்பட்டு ஒரு வருடம் கடந்த நிலையில் இதன் செயல்பாடு குறித்து முதல்வர் கருத்து தெரிவித்து இருக்கிறார். அதில், கல்விச்செல்வம் காலத்தால் அழியாதது, பாறைக்கு அடியில் வெறும் தங்க கட்டியாக இல்லாமல் அதனை பயன்படுத்தி பளபளவென ஜொலிக்கும் தங்கமாக மாற்ற வேண்டும் என அறிஞர் அண்ணா கூறியதை முதல்வர் சுட்டிக் காட்டியுள்ளார்.
அண்ணாவின் இந்தச் சொல்லுக்கு செயல்வடிவம் கொடுக்கும் வகையில் அம்மா தலைமையிலான அரசு இலவச கல்வி, இலவச பாடப்புத்தகங்கள், நோட்டு புத்தகங்கள், ஸ்கூல் பேக், காலணிகள், சீருடைகள், மிதிவண்டி, லேப்டாப், கல்வி ஊக்கத்தொகை எனப் பல்வேறு சலுகைகளை வழங்கி வருகிறது. அவர் தொடங்கிய இந்தத் திட்டங்களை அதிமுக அரசு தற்போது வரை சீரிய முறையில் செயல்படுத்தி வருகிறது என்பதையும் அவர் சுட்டிக்காட்டினார்.
மேலும் பேசிய அவர் கடந்த வருடம் இதே நாள் பள்ளி மாணவர்களுக்கு என புதிய கல்வி தொலைக்காட்சி என்ற சேனலை தொடங்கி வைத்தேன். இதுவரை இல்லாத அளவு கொரோனா வைரஸால் உலக நாடுகள் அனைத்திலும் பொருளாதார பாதிப்பு ஏற்பட்டுகிறது. ஆனால் தமிழக மாணவர்களுக்கு இந்தத் தொலைக்காட்சி சேனல் மூலமாக கல்வி பயிற்றுவிக்கப் பட்டு வருகிறது என்பதைப் பெருமையோடு பார்க்கிறேன் குறிப்பிட்டு காட்டினார்.
கொரோனா காலக்கட்டத்தை ஒரு சவாலாக ஏற்று பல்வேறு மாற்றங்களுடன் தமிழக அரசு இந்தத் திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. பள்ளிகளுக்கான பாட அட்டவணைப் போன்று கல்வித் தொலைக்காட்சிக்கான ஒளிபரப்பு அட்டவணை, வகுப்பு வாரியாக இரண்டாம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரையில் ஆசிரியர்களை கொண்டு வீடியோ பதிவுகள் உருவாக்கப்பட்டு அவை ஒளிபரப்பப்பட்டு வருகிறது. தொலைக்காட்சியில் காண தவறிய மாணவர்கள் மறுநாள் யூடியூப் பக்கத்தில் இந்த வகுப்புகளை பாக்கும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இதன்மூலம் கல்வித்துறையில் தமிழகம் முன்னோடியாக திகழ்கிறது என்பதோடு தனக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி அளிக்கும் திட்டமாக இது இருக்கிறது எனவும் தமிழக முதல்வர் மகிழ்ச்சித் தெரிவித்தார்.
மேலும் கல்வி தொலைக்காட்சி ஓராண்டாக வெற்றிகரமாக நிறைவு செய்ததற்கு தன்னுடைய பாராட்டுகளையும் முதல்வர் தெரிவித்துக் கொண்டார். இந்த முயற்சிக்கு உறுதுணையாக இருந்த பள்ளிக்கல்வித்துறை அமைச்சர், கல்வித்துறை உயர் அதிகாரிகள், ஆசிரியப் பெருமக்கள் என அனைவருக்கும் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன் எனவும் பேசினார். மேலும், தமிழக மாணவ மாணவர்களின் நலனைக் கருத்தில் கொண்ட என் தலைமையிலான அரசு இதுபோன்ற எண்ணற்ற பல சாதனைகளைத் தொடர்ந்து செய்யும் எனவும் நம்பிக்கை அளித்தார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout