எடப்பாடி பழனிசாமியுடன் தொலைபேசியில் ஆலோசனை செய்த அமைச்சர் அன்பில் மகேஷ்: என்ன காரணம்?
Send us your feedback to audioarticles@vaarta.com
சிபிஎஸ்இ 12-ம் வகுப்பு தேர்வு ரத்து என சமீபத்தில் பிரதமர் மோடி அறிவித்ததை அடுத்து உத்தரப்பிரதேசம் உள்பட பல மாநிலங்களில் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டதாக அறிவித்தன. ஆனால் தமிழகத்தைப் பொருத்தவரை 12-ம் வகுப்பு பொதுத் தேர்வை நடத்த வேண்டும் என பெற்றோர்கள் கல்வியாளர்கள் உள்பட பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர்
இந்த நிலையில் 12-ம் வகுப்பு தேர்வு குறித்த இறுதி முடிவை இன்று தமிழக அரசு எடுக்க உள்ளது. இதனை அடுத்து தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் அவர்கள் அனைத்து கட்சி சட்டமன்ற உறுப்பினர்களின் பிரதிநிதிகளிடம் இது குறித்து ஆலோசனை செய்து வருகிறார். அந்த வகையில் சற்று முன்னர் முன்னாள் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களிடம் தமிழகத்தில் 12-ம் வகுப்பு பொதுத் தேர்வு நடத்துவது குறித்து அவரது கருத்தை கேட்டறிந்தார். இதேபோல் அவர் ஒவ்வொரு கட்சியின் முக்கிய சட்டமன்ற உறுப்பினர்களிடம் ஆலோசனை செய்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது
மேலும் இன்று 12 மணி முதல் 1 மணி வரை அனைத்து கட்சி தலைவர்களுடன் ஆலோசனை கேட்க இருப்பதாகவும் அதன் பின்னர் 3 மணிக்கு மருத்துவ நிபுணர்கள் மற்றும் மனோதத்துவ நிபுணர்களுடன் ஆலோசனை செய்ய இருப்பதாகவும் இந்த ஆலோசனைகளின் அடிப்படையில் அறிக்கை ஒன்றை தயாரித்து தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அவர்களிடம் அளிக்க இருப்பதாகவும் அந்த அறிக்கையின் அடிப்படையில் 12-ம் வகுப்பு தேர்வு குறித்த நல்ல முடிவை முதலமைச்சர் எடுப்பார் என்றும் அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்
12-ம் வகுப்பு பொதுத் தேர்வை நடத்துவது குறித்த முடிவை அனைத்து தரப்பினரிடம் ஆலோசித்து மாணவர்களின் எதிர்காலத்தை கணக்கில் கொண்டு முக்கிய முடிவு எடுக்கப்படும் என்று தமிழக அரசு உறுதியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. உயர்கல்விக்கு 12-ம் வகுப்பு தேர்வின் மதிப்பெண் முக்கியம் என்பதால் தமிழகத்தில் 12-ம் வகுப்பு தேர்வு நடைபெறவே அதிக வாய்ப்பிருப்பதாகவும் கொரோனா தொற்று இரண்டாவது அலை முடிவடைந்து மூன்றாவது அலை தொடங்குவதற்கு முன்பாக தகுந்த பாதுகாப்புடன் 12-ம் வகுப்பு தேர்வை நடத்த வாய்ப்பு இருப்பதாகவும் தமிழக அரசு வட்டாரங்கள் கூறுகின்றன.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments