'ராட்சசி' ரிலீஸான மறுநாள் பள்ளிக்கல்வித்துறை வெளியிட்ட அதிரடி உத்தரவு
- IndiaGlitz, [Saturday,July 06 2019]
ஜோதிகா நடித்த 'ராட்சசி' திரைப்படம் நேற்று வெளியான நிலையில் இந்த படத்தில் ஒரு காட்சி உண்டு. அதில் ஜோதிகா தலைமை ஆசிரியராக பொறுப்பேற்றவுடன் பள்ளியில் பணிபுரியும் ஒரு பெண், அனைத்து ஆசிரியர்களையும் அறிமுகம் செய்ய அழைத்து வரவா? என்று கேட்பார். அதற்கு ஜோதிகா, பள்ளி நேரத்தில் யாரையும் அழைக்க வேண்டாம், தேவைப்பட்டால் மாலையில் அல்லது இன்னொரு நாள் பார்த்து கொள்ளலாம்' என்று கூறுவார்.
இந்த நிலையில் இன்று பள்ளிக்கல்வித்துறை ஒரு அதிரடி உத்தரவை வெளியிட்டுள்ளது. அதன்படி பள்ளிகளின் நிர்வாக விவரங்கள் குறித்து ஆலோசனை செய்ய ஆசிரியர்களை நேரில் அழைத்து கூட்டம் நடத்த வேண்டிய அவசியம் இல்லை என்றும், நிர்வாக காரணங்களுக்காக கூட்டம் நடத்த வேண்டியிருந்தால் மாலை நேரம் அல்லது சனிக்கிழமைகளில் நடத்தலாம் என்றும் அதில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அதேபோல் தலைமையாசிரியர் மற்றும் ஆசிரியர்கள் பள்ளி வேலை நேரங்களில் கல்வி அலுவலகங்களுக்கு செல்வதை தவிர்க்க வேண்டும் என்றும், தேவைப்படும் விவரங்களை மின்னஞ்சல் வழியே அனுப்பினால் பள்ளி வேலைநேரம் பாதிக்கப்படாது எனவும் பள்ளிக்கல்வித்துறையின் சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
'ராட்சசி' திரைப்படம் வெளிவந்த மறுநாளே அந்த படத்தில் வருவது போன்ற ஒரு உத்தரவை பள்ளிக்கல்வித்துறை பிறப்பித்துள்ளதை நெட்டிசன்கள் சுட்டிக்காட்டி வருகின்றனர்.