தமிழகத்தில் பள்ளிகள் திறக்கப்படுகிறதா? பள்ளிகல்வித்துறை இயக்குநரின் அதிரடி உத்தரவு
- IndiaGlitz, [Monday,June 01 2020]
பள்ளிகள் திறப்பு குறித்து பெற்றோர்களிடம் கருத்து கேட்க முடிவு செய்யப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளது
தமிழகத்தில் பள்ளிகளை திறப்பது குறித்து அனைத்து தரப்பு பெற்றோர்களிடம் கருத்து கேட்க அரசு முடிவு செய்துள்ளதாகவும், பொதுமுடக்கத்தால் கல்வியாண்டு தொடங்குவது தாமதமாகும் நிலையில் பெற்றோரிடம் கருத்து கேட்டு அதன்பின் பள்ளிகள் திறப்பது குறித்து பள்ளிக்கல்வித்துறை முடிவெடுக்கவுள்ளதாகவும் தெரிகிறது
வரும் கல்வியாண்டில் மேற்கொள்ளவிருக்கும் மாற்றங்கள் தொடர்பாகவும் பெற்றோரிடம் கருத்து கேட்கப்படும் என்றும், ஒவ்வொரு வகையான பள்ளியிலும் ஒரே ஒரு பெற்றோரிடம் கருத்து கேட்க வேண்டும் எனவும் அறிவுறுத்தல் செய்யப்பட்டுள்ளது
மெட்ரிக், நர்சரி உள்ளிட்ட 8 வகையான பள்ளிகளிலும் கருத்து கேட்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாகவும், தலா ஒரு பெற்றோரிடம் கருத்து கேட்டு அவர்களின் கருத்தை நாளை பகல் 12 மணிக்குள் அனுப்ப வேண்டும் என பள்ளிகல்வித்துறை இயக்குநர் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளது