தமிழகத்தில் பள்ளிகள் திறக்கப்படுகிறதா? பள்ளிகல்வி​த்துறை இயக்குநரின் அதிரடி உத்தரவு

  • IndiaGlitz, [Monday,June 01 2020]

பள்ளிகள் திறப்பு குறித்து பெற்றோர்களிடம் கருத்து கேட்க முடிவு செய்யப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளது

தமிழகத்தில் பள்ளிகளை திறப்பது குறித்து அனைத்து தரப்பு பெற்றோர்களிடம் கருத்து கேட்க அரசு முடிவு செய்துள்ளதாகவும், பொதுமுடக்கத்தால் கல்வியாண்டு தொடங்குவது தாமதமாகும் நிலையில் பெற்றோரிடம் கருத்து கேட்டு அதன்பின் பள்ளிகள் திறப்பது குறித்து பள்ளிக்கல்வித்துறை முடிவெடுக்கவுள்ளதாகவும் தெரிகிறது

வரும் கல்வியாண்டில் மேற்கொள்ளவிருக்கும் மாற்றங்கள் தொடர்பாகவும் பெற்றோரிடம் கருத்து கேட்கப்படும் என்றும், ஒவ்வொரு வகையான பள்ளியிலும் ஒரே ஒரு பெற்றோரிடம் கருத்து கேட்க வேண்டும் எனவும் அறிவுறுத்தல் செய்யப்பட்டுள்ளது

மெட்ரிக், நர்சரி உள்ளிட்ட 8 வகையான பள்ளிகளிலும் கருத்து கேட்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாகவும், தலா ஒரு பெற்றோரிடம் கருத்து கேட்டு அவர்களின் கருத்தை நாளை பகல் 12 மணிக்குள் அனுப்ப வேண்டும் என பள்ளிகல்வி​த்துறை இயக்குநர் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளது

More News

பாடகி சுசித்ராவின் அடுத்த வீடியோ: இணையதளங்களில் வைரல்

கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன் பின்னணி பாடகி சுசித்ரா 'சுசுலீக்ஸ்' என்ற பெயரில் தனது சமூக வலைதளப் பக்கத்தில் ஒருசில சர்ச்சைக்குரிய வீடியோக்கள் மற்றும் புகைப்படங்களை வெளியிட்டு

முதல்முறையாக டபுள் ஆக்சனில் தனுஷ் பாடலுக்கு நடனமாடும் வார்னர்

பிரபல ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் டேவிட் வார்னர் இந்த கொரோனா விடுமுறையில் தமிழ் தெலுங்கு மற்றும் இந்தி திரைப்படங்களின் பாடல்களுக்கு நடனமாடி அதுகுறித்த வீடியோக்களை

பைக்கை திருடி சொந்த ஊருக்கு சென்றவுடன் பைக்கை கொரியரில் அனுப்பிய நபர்

கோவையில் உள்ள ஒரு நபர் பைக்கை திருடி, தனது குடும்பத்துடன் தனது சொந்த ஊருக்கு சென்ற பின், பைக்கை அதன் உரிமையாளருக்கு கொரியரில் அனுப்பி உள்ள தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

சென்னையை நோக்கி நகரும் சிகப்பு தக்காளிகள்: செம மழை பெய்யும் என வெதர்மேன் தகவல்

சென்னை மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் இன்று முதல் நல்ல மழை பெய்யும் என தமிழ்நாடு வெதர்மேன் தனது சமூக வலைத்தளத்தில் கூறியுள்ளார்

கொரோனா நேரத்தில் தலைத்தூக்கும் போபால் அணுவுலை வெடிப்பு விவகாரம்!!!

போபால் தலைநகரில் கடந்த 1984 ஆம் ஆண்டு பூச்சிக்கொல்லி மருந்து தயாரிக்கும் நிறுவனத்தில் ஏற்பட்ட அணுவுலை வெடிப்பினால் அந்நகரம் முழுவதுமே கடுமையாகப் பாதிக்கப்பட்டது.