நிலைமை கைமீறிச் செல்வதற்குள் உடனடியாக நிறுத்துங்கள்: எடிட்டர் சுரேஷ் டுவிட்

  • IndiaGlitz, [Tuesday,June 01 2021]

’தமிழ்ப்படம்’ என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் எடிட்டராக அறிமுகமான எடிட்டர் சுரேஷ் அதன்பின்னர் ’தூங்காநகரம்’ ’வணக்கம் சென்னை’ ’மாயா' உள்பட பல படங்களுக்கு எடிட்டிங் செய்துள்ளார். இந்த நிலையில் அவர் தனது சமூக வலைத்தளத்தில் நிலைமை நிலைமை கைமீறி செல்வதற்குள் உடனடியாக நிறுத்துங்கள்’ என்று டுவிட் ஒன்றை பதிவு செய்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

நேற்று மே 31ம் தேதி உலக புகையிலை ஒழிப்பு தினம் அனுசரிக்கப்பட்டது என்பதும் இதனை அடுத்து புகையிலை குறித்த விழிப்புணர்வை கமல், யுவன் சங்கர் ராஜா உள்பட பலர் தங்களது ட்விட்டர் பக்கங்களில் பதிவு செய்தனர் என்பதை பார்த்தோம்.

இந்த நிலையில் தான் நாள் ஒன்றுக்கு 50 சிகரெட்டுக்கு மேல் புகைத்துக் கொண்டு இருந்ததாகவும் ஆனால் தற்போது நிறுத்தி விட்டதாகவும் புகையிலையால் உங்கள் குடும்பத்தின் நிலைமை கை மீறி செல்வதற்குள் உடனடியாக நிறுத்துங்கள் என்றும் அவர் அறிவுறுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் தனது டுவிட்டரில் மேலும் கூறியிருப்பதாவது:

ஒரு நாளைக்கு 50க்கும் அதிகமான சிகரெட்டுகளைப் பிடிப்பதிலிருந்து, தற்போது ஒரு சிகரெட்டைக் கூட பிடிக்காமல் இருப்பதுதான் எனக்கு மிகவும் கடினமாக இருந்த விஷயம். ஆனால், மிகவும் பலனளித்த விஷயமும் கூட. எனவே புகைப்பதை நிறுத்துங்கள். உங்கள் குடும்பத்தினர் உங்களை நேசிக்கின்றனர். அவர்களின் வலிமையாக, நம்பிக்கையாக இருங்கள். நிலைமை கைமீறிச் செல்வதற்குள் உடனடியாக நிறுத்துங்கள். என்னால் முடியுமென்றால் கண்டிப்பாக உங்களாலும் முடியும்”.

More News

நெல்லை மண்ணில் ஜூன் மாதத்தை வித்தியாசமாக வரவேற்ற கீர்த்தி பாண்டியன்: வைரல் வீடியோ!

நடிகர் மற்றும் தயாரிப்பாளர் அருண்பாண்டியன் மகள் கீர்த்தி பாண்டியன் சமீபத்தில் வெளியான 'அன்பிற்கினியாள்' என்ற திரைப்படத்தில் நடித்தார் என்பதும் தந்தை மகளாக அருண்பாண்டியன் - கீர்த்தி பாண்டியன்

லிங்குசாமி ஹீரோவை வளைத்து போட்டாரா ஏ.ஆர்.முருகதாஸ்?

பிரபல இயக்குனர் லிங்குசாமி இயக்கி வரும் படத்தில் நடிக்கும் ஹீரோ ஒருவர்தான் ஏஆர் முருகதாஸ் இயக்கும் அடுத்த படத்தின் ஹீரோ என்று கூறப்பட்டு வருவதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது 

உங்க கையில்தான் இருக்கு… தமிழக மக்களுக்கு முதல்வர் வைத்த உருக்கமான வேண்டுகோள்!

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தமிழகத்தில், கொரோனா ஊரடங்கை நீடித்துக் கொண்டே போகமுடியாது.

நடிகர் மாதவன் பற்றி நீங்கள் அறியாத 10 சுவாரசியத் தகவல்கள்!

நடிகர், எழுத்தாளர், திரைப்படத் தயாரிப்பாளர் என ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்ற நடிகர் மாதவன் தற்போது இயக்குநர்

நர்ஸ்களுக்கு பாலியல் தொந்தரவு....! மாஜி மணிகண்டன் மீது குவியும் புகார்கள்...!

மாஜி அமைச்சர் மணிகண்டன் மீது ஏராளமான பாலியல் புகார்கள் அடுத்தடுத்து வந்ததை தொடர்ந்து,