'விவேகம்' இடி என்றால் 'மெர்சல்' மின்னல்': எடிட்டர் ரூபன்

  • IndiaGlitz, [Tuesday,August 01 2017]

தல அஜித் நடித்து முடித்துள்ள 'விவேகம்' மற்றும் தளபதி விஜய் நடித்து வரும் 'மெர்சல்; ஆகிய இரண்டு படங்களிலும் காஜல் அகர்வால் நாயகியாக நடித்து வருவது தெரிந்ததே. ஆனால் இந்த இரண்டு படங்களுக்கும் எடிட்டிங் செய்து வருகிறார் எடிட்டர் ரூபன்.

ஒரே நேரத்தில் தல, தளபதி படங்களுக்கு எடிட்டிங் செய்து வரும் ரூபன், இந்த இரண்டு படங்கள் குறித்து சுருக்கமாக கூறியது என்னவெனில், 'தல அஜித்தின் 'விவேகம்' மேஜிக்கல் இடி என்றும், தளபதியின் 'மெர்சல்' மின்னல் என்றும் கூறினார்.

அஜித் ஸ்க்ரீனில் தோன்றும்போதே ஒரு இடி இடிப்பதை போன்று அதிரடியாகஇருக்கும் என்றும், அஜித் இதுவரை எடுக்காத ரிஸ்க்குகள் இந்த படத்திற்காக எடுத்துள்ளதாகவும் கூறியுள்ளார். மேலும் அஜித் இதுவரை செய்யாத பல விஷயங்களை இந்த படத்தில் செய்துள்ளதாகவும் குறிப்பாக இரண்டு ரயில்கள் சென்று கொண்டிருக்கும்போது அதற்கு நடுவில் ஒரு சண்டைக்காட்சி என்பது அஜித் எடுத்த அதிகப்படியான ரிஸ்க்கான சண்டைக்காட்சி என்றும் அவர் தெரிவித்தார்.

அதேபோல் தளபதியின் 'மெர்சல்' படத்தை மின்னல் என்று கூறுவது ஏனெனில் விஜய்யின் எனர்ஜி லெவல்தான். இந்த படத்தில் அவரது தோற்றம், ஆக்சன், நடனம் அனைத்திலும் அவருடைய எனர்ஜி வேற லெவலில் இருக்கும்' என்று எடிட்டர் ரூபன் கூறியுள்ளார். எனவே இந்த இரண்டு படங்களும் தல, தளபதி ரசிகர்களுக்கு சிறப்பு விருந்தாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

More News

'விவேகம்' ரிலீஸ் தேதி! இயக்குனர் சிவாவின் அதிகாரபூர்வ அறிவிப்பு

தல அஜித் நடித்த 'விவேகம்' திரைப்படத்தின் சென்சார் சான்றிதழ் கிடைத்துவிட்ட நிலையில் நேற்று இரவு இயக்குனர் சிவா தனது சமூக வலைத்தள பக்கத்தில் 'விவேகம்' படத்தின் அதிகாரபூர்வ ரிலீஸ் தேதியை அறிவித்துள்ளார்...

ஓவியாவின் நேர்மைக்கு மேலும் ஒரு சான்று

பிக்பாஸ் வீட்டில் இருக்கும் பங்கேற்பாளர்களில் அனைவரையும் கவர்ந்த ஒருவர் என்றால் அது ஓவியா என்பது சந்தேகமற்ற ஒருகூற்று. இதற்கு முதல் முழு காரணம் ஓவியாவின் உண்மை...

'விவேகம்' படத்தை பாராட்டிய விஜய்

தல அஜித்தின் 'விவேகம்' மற்றும் தளபதி விஜய்யின் 'மெர்சல்;' ஆகிய இரண்டு படங்களின் எடிட்டராக பணி செய்து கொண்டிருக்கும் ரூபன் IndiaGlitzஇடம் பகிர்ந்துகொண்ட தகவல் அனைவரையும் ஆச்சரியப்படும் வகையில் உள்ளது.

சிலிண்டர் மானியம் ரத்து: ஒவ்வொரு மாதமும் ரூ.4 விலை அதிகம். மத்திய அரசு அறிவிப்பு

சமையல் எரிவாயு சிலிண்டருக்கான மானியத்தை ஒட்டுமொத்தமாக ரத்து செய்வதோடு, ஒவ்வொரு மாதம் சிலிண்டரின் விலையை ரூ.4 அதிகரிக்க எண்ணெய் நிறுவனங்களுக்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.

உங்கள் தோளில் சவாரி செய்ய முயலும் அரசியல் கட்சிகள்: கமல்ஹாசனுக்கு குஷ்பு அறிவுரை

உலக நாயகன் கமல்ஹாசன் கடந்த சில நாட்களாகவே தமிழக அரசை கடுமையாக விமர்சித்து வரும் நிலையில், கமல்ஹாசனுக்கு ஆதரவு கொடுக்கும் போர்வையில் சில அரசியல் கட்சிகள் கமல்ஹாசனை தங்கள் கட்சியில் இழுக்கவும், அல்லது அரசுக்கு எதிராக தூண்டிவிடவும் செய்து வருகிறது.