'பட்டாஸ்' படத்தின் டிரைலர் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு
Send us your feedback to audioarticles@vaarta.com
தனுஷ், சினேகா நடிப்பில் துரை செந்தில்குமார் இயக்கத்தில் சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகியுள்ள 'பட்டாஸ்’ திரைப்படம் ஜனவரி 16 ஆம் தேதி வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில் இந்த படத்தின் டிரைலர் ரஜினியின் ‘தர்பார்’ படத்துடன் ஜனவரி 9ஆம் தேதி திரையரங்குகளில் திரையிடப்படும் என்று கூறப்பட்டது
இதனையடுத்து 'பட்டாஸ்’ ட்ரெய்லர் எடிட்டிங் பணிகள் விறுவிறுப்பாக நடந்து வந்த நிலையில் சற்று முன்னர் படத்தின் எடிட்டர் ரூபன் அவர்கள் தனது சமூக வலைப்பக்கத்தில் 'பட்டாஸ்’ படத்தின் ட்ரெய்லர் எடிட்டிங் பணிகள் முற்றிலும் முடிந்து விட்டதாக அறிவித்து உள்ளார். இதனை சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனமும் உறுதி செய்துள்ளது
இதனை அடுத்து 'பட்டாஸ்’ திரைப்படத்தின் அதிகாரபூர்வ டிரைலர் நாளை காலை 10.31 மணிக்கு வெளியாகும் என நடிகர் தனுஷ் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார். மேலும் தர்பார் திரைப்படத்தின் ரிலீஸ் தினத்தில் பட்டாஸ் படத்தின் ட்ரைலர் திரையரங்குகளில் திரையிடப்படும் என்றும் கூறப்படுகிறது
Here is the most awaited Update ! #PattasTrailerTomorrow at 10.31 AM .. Let the celebrations begin ??@dhanushkraja @durairsk @omdop @actress_Sneha @Mehreenpirzada @iamviveksiva @MervinJSolomon @AlwaysJani @dhilipaction @PrakashMabbu @Gdurairaj10 @LahariMusic pic.twitter.com/wpc83CojIF
— Sathya Jyothi Films (@SathyaJyothi_) January 6, 2020
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments