ஹாலிவுட் தரத்தில் இருக்கும்: சிவகார்த்திகேயனின் அடுத்த படம் குறித்து எடிட்டர்!

சிவகார்த்திகேயனின் அடுத்த திரைப்படம் ஹாலிவுட் தரத்தில் இருக்கும் என்றும் இதை நான் மிகைப்படுத்திக் கூறவில்லை என்றும் படம் பார்க்கும்போது உங்களுக்கே தெரியும் என்றும் பிரபல எடிட்டர் ஒருவர் தனது பேட்டியில் கூறியுள்ளார்.

சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படங்களில் ஒன்று ‘அயலான்’ என்பதும் ரவிக்குமார் இயக்கத்தில் உருவாகி வரும் இந்த படம் கடந்த இரண்டு ஆண்டுகளாக படப்பிடிப்பு மற்றும் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் ‘அயலான்’ படம் இந்த ஆண்டு ரிலீஸ் ஆகும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில் இந்த படத்தின் எடிட்டர் ரூபன் சமீபத்தில் ஊடகம் ஒன்றுக்கு பேட்டி அளித்தார். அப்போது ‘அயலான்’ திரைப்படம் ஹாலிவுட் தரத்தில் இருக்கும் என்றும், நான் இந்த இதை மிகைப்படுத்திச் சொல்லவில்லை என்றும், இந்த படத்தில் காண்பிக்கப்படும் ஏலியன்கள் மற்றும் சில காட்சிகள் ஹாலிவுட் தரத்தை மிஞ்சும் அளவுக்கு இருக்கும் என்றும் கூறினார்.

மேலும் சிவகார்த்திகேயன் ஏற்கனவே தமிழ் சினிமாவில் பெரிய நடிகராக இருந்தாலும் இந்த படம் அவரை அடுத்த லெவலுக்கு கொண்டு செல்லும் படமாக இருக்கும் என்றும் அவர் கூறியுள்ளார். எடிட்டர் ரூபனின் பேட்டியை அடுத்து இந்த படத்திற்கு எதிர்பார்ப்பு எகிறியுள்ளது.

சிவகார்த்திகேயன் ஜோடியாக ரகுல் ப்ரீத்தி சிங் நடித்துள்ள இந்த திரைப்படத்தில் இஷா கோபிகர், யோகிபாபு, கருணாகரன், பானுப்பிரியா, பால சரவணன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர் என்பதும், ஆஸ்கார் நாயகன் ஆர் ரஹ்மான் இசையமைத்துள்ள இந்த படத்தை கே.ஜே.ஆர் ஸ்டுடியோஸ் நிறுவனம் பிரம்மாண்டமாக தயாரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
 

More News

சூப்பர்ஹிட் பாடலுக்கு செம டான்ஸ் ஆடும் பிக்பாஸ் ஐக்கி பெர்ரி!

பிக் பாஸ் சீசன் 5 போட்டியாளர்களில் ஒருவரான ஐக்கி பெர்ரி,  சூப்பர் ஹிட் பாடல் ஒன்றுக்கு நடனமாடிய வீடியோவை தனது இன்ஸ்டாவில் பதிவு செய்துள்ள நிலையில் அந்த வீடியோவுக்கு லைக்ஸ் குவிந்து வருகிறது.

ஹைதராபாத் போலீஸாக மாறிய த்ரிஷா: வைரல் புகைப்படம்!

தமிழ் சினிமாவில் கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக நாயகியாக நடித்து வரும் நடிகை த்ரிஷா திடீரென ஹைதராபாத் போலீஸாக மாறி இருக்கும் புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது. 

இவர் தான் மீரா ஜாஸ்மினின் அண்ணனா? வைரல் புகைப்படங்கள்!

நடிகை மீரா ஜாஸ்மின் தனது சகோதரனின் புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் பதிவு செய்துள்ள நிலையில் அந்த புகைப்படத்தை பார்த்து இவர் தான் மீரா ஜாஸ்மின் அண்ணனா?

தனுஷிடம் 4 மணி நேரம் வேலை வாங்கிய இளையராஜா!

 தனுஷிடம் இசைஞானி இளையராஜா 4 மணி நேரம் வேலை வாங்கியதாக வெளிவந்திருக்கும் தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

அஜித் பட நாயகியுடன் ரக்சன்: 'குக் வித் கோமாளி 3' நிகழ்ச்சியில் கலந்து கொள்கிறாரா?

 'குக் வித் கோமாளி என்ற நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வரும் ரக்சன், அஜித் பட நடிகையுடன் எடுத்த புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ள நிலையில்