'விவேகம்', 'மெர்சல்' படக்குழுவினர்களின் விட்டுக்கொடுக்கும் மனப்பான்மை
- IndiaGlitz, [Saturday,August 26 2017]
சினிமா என்பது கோடிக்கணக்கான பணம் முதலீடு செய்யப்படும் ஒரு தொழில் மட்டுமின்றி அதில் ஆயிரக்கணக்கான மனித உழைப்பும் இருக்கின்றது என்பதை கூட அறியாமல் ஒருசில பெய்டு விமர்சகர்கள் ஒருசில ஆயிரங்களுக்காக முதல் நாள் முதல் காட்சி முடிந்தவுடன் நெகட்டிவ் விமர்சனம் செய்து படத்தின் போக்கை மாற்றிவிடுகின்றனர்.
இந்த நிலையில் சினிமா தயாரிப்பாளர்களுக்கு இடையே மனிதாபிமானமும், விட்டுக்கொடுக்கும் மனப்பான்மையும் உள்ளது என்பதை நிரூபிக்கும் வகையில் சமீபத்தில் 'விவேகம்' மற்றும் 'மெர்சல்' படக்குழுவினர் நடந்துள்ளனர்.
அதாவது 'மெர்சல்' படத்தின் சிங்கிள் ரிலீஸ் காரணமாக 'விவேகம்' படத்தின் டிரைலரை ஒத்தி வைத்த சம்பவமும், மெர்சல் படத்தின் டிரைலர், 'விவேகம்; படத்தின் ரிலீஸ் காரணமாக ஒத்தி வைத்த சம்பவம் குறித்தும் தற்போது தெரியவந்துள்ளது. அஜித், விஜய் ஆகிய இருவருமே தொழில் அளவில் போட்டியாளர் என்றாலும் ஒருவர் படத்தின் புரமோஷனின் போது இன்னொருவர் விட்டுக்கொடுத்துள்ள இந்த முதிர்ச்சியான நடவடிக்கை அனைவரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளது. இந்த தகவலை இந்த இரு படங்களின் எடிட்டர் ரூபன் உறுதி செய்துள்ளார்.
சினிமாவை அழிக்க எத்தனை பெய்டு விமர்சகர்கள் தோன்றினாலும் சினிமாக்காரர்களுக்குள் சரியான புரிதல் இருந்தால் வெற்றியை யாராலும் தடுக்க முடியாது என்பதற்கு இது ஒரு நல்ல உதாரணமாக கருதப்படுகிறது.