டிசம்பர் 21ல் வெளிவரும் 3 படங்களில் பணிபுரிந்த பிரபலம்
Send us your feedback to audioarticles@vaarta.com
கிறிஸ்துமஸ் திருநாள் விடுமுறை தினங்களான டிசம்பர் 20 மற்றும் 21 ஆகிய தேதிகளில் ஐந்து பிரபல நடிகர்களின் தமிழ்ப்படங்கள் வெளிவரவுள்ளது. தனுஷின் 'மாரி 2', விஜய்சேதுபதியின் 'சீதக்காதி', 'சிவகார்த்திகேயனின் 'கனா', ஜெயம் ரவியின் 'அடங்க மறு' மற்றும் விஷ்ணு விஷாலின் 'சிலுக்குவார்பட்டி சிங்கம்' ஆகிய ஐந்து பிரபலங்களின் திரைப்படங்கள் வெளிவரவுள்ளதால் சினிமா ரசிகர்கள் குஷியில் உள்ளனர்.
இந்த ஐந்து படங்களில் சிவகார்த்திகேயனின் 'கனா', ஜெயம் ரவியின் 'அடங்க மறு' மற்றும் விஷ்ணு விஷாலின் 'சிலுக்குவார்பட்டி சிங்கம்' ஆகிய மூன்று படங்களின் படத்தொகுப்பாளர் பிரபல எடிட்டர் ரூபன் என்பது குறிப்பிடத்தக்கது. ஒரே எடிட்டர் எடிட் செய்த மூன்று படங்கள் ஒரே நாளில் வெளிவருவது ஒரு சாதனையாக கருதப்படுகிறது.
இதுகுறித்து எடிட்டர் ரூபன் தனது சமூக வலைத்தள பக்கத்தில் பெருமையுடன் குறிப்பிட்டுள்ளார். மேலும் எடிட்டர் ரூபன் தற்போது அஜித்தின் 'விஸ்வாசம்', சாம் ஆண்டன் இயக்கி வரும் '100', ஜீவாவின் 'கொரில்லா மற்றும் ராகவா லாரன்ஸ் நடித்து இயக்கி வரும் 'காஞ்சனா 3' ஆகிய படங்களிலும் பணிபுரிந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout