close
Choose your channels

இந்த படம் நிச்சயம் ரூ.100 கோடி வசூல் செய்யும்: தீபாவளிக்கு வெளியாகும் படம் குறித்து எடிட்டர் ரூபன்..!

Friday, July 21, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

வரும் தீபாவளி அன்று கார்த்தியின் ’ஜப்பான்’ சிவகார்த்திகேயனின் ’அயலான்’ மற்றும் கார்த்திக் சுப்புராஜின்’ ஜிகர்தண்டா 2’ ஆகிய மூன்று படங்கள் வெளியாகும் என இப்போதைக்கு அறிவிக்கப்பட்ட நிலையில் இவற்றில் ஒரு படம் நிச்சயம் 100 கோடி ரூபாய் வசூல் செய்யும் என எடிட்டர் ரூபன் தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சிவகார்த்திகேயன் நடிப்பில் ரவிக்குமார் இயக்கத்தில் உருவாகி இருக்கும் திரைப்படம் ’அயலான்’. இந்த படம் மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவாகியுள்ள நிலையில் வரும் தீபாவளி அன்று வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த படத்தின் தொழில்நுட்ப பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருவதாகவும் விரைவில் இந்த படத்தின் டீசர் விரைவில் வெளியாகும் என்று எடிட்டர் ரூபன் தெரிவித்துள்ளார். மேலும் இசைப்புயல் ஏஆர் ரகுமான் இசையில் உருவாகும் இந்த படம் நிச்சயம் 100 கோடி ரூபாய் வசூல் செய்யும் என்று சமீபத்தில் அளித்த பேட்டியில் எடிட்டர் ரூபன் தெரிவித்துள்ளார். இதனை அடுத்து இந்த படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

வேற்று கிரகத்திலிருந்து பூமிக்கு வரும் மனிதன் குறித்த கதையம்சம் கொண்ட இந்த படத்தில் சிவகார்த்திகேயன், ரகுல் ப்ரித்திசிங், இஷா கோபிகர், யோகி பாபு, கருணாகரன், உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். கேஜேஆர் ஸ்டுடியோஸ் மற்றும் 24 ஏஎம் ஸ்டுடியோஸ் நிறுவனங்கள் இந்த படத்தை தயாரித்து வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment