இந்த படம் நிச்சயம் ரூ.100 கோடி வசூல் செய்யும்: தீபாவளிக்கு வெளியாகும் படம் குறித்து எடிட்டர் ரூபன்..!

  • IndiaGlitz, [Friday,July 21 2023]

வரும் தீபாவளி அன்று கார்த்தியின் ’ஜப்பான்’ சிவகார்த்திகேயனின் ’அயலான்’ மற்றும் கார்த்திக் சுப்புராஜின்’ ஜிகர்தண்டா 2’ ஆகிய மூன்று படங்கள் வெளியாகும் என இப்போதைக்கு அறிவிக்கப்பட்ட நிலையில் இவற்றில் ஒரு படம் நிச்சயம் 100 கோடி ரூபாய் வசூல் செய்யும் என எடிட்டர் ரூபன் தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சிவகார்த்திகேயன் நடிப்பில் ரவிக்குமார் இயக்கத்தில் உருவாகி இருக்கும் திரைப்படம் ’அயலான்’. இந்த படம் மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவாகியுள்ள நிலையில் வரும் தீபாவளி அன்று வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த படத்தின் தொழில்நுட்ப பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருவதாகவும் விரைவில் இந்த படத்தின் டீசர் விரைவில் வெளியாகும் என்று எடிட்டர் ரூபன் தெரிவித்துள்ளார். மேலும் இசைப்புயல் ஏஆர் ரகுமான் இசையில் உருவாகும் இந்த படம் நிச்சயம் 100 கோடி ரூபாய் வசூல் செய்யும் என்று சமீபத்தில் அளித்த பேட்டியில் எடிட்டர் ரூபன் தெரிவித்துள்ளார். இதனை அடுத்து இந்த படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

வேற்று கிரகத்திலிருந்து பூமிக்கு வரும் மனிதன் குறித்த கதையம்சம் கொண்ட இந்த படத்தில் சிவகார்த்திகேயன், ரகுல் ப்ரித்திசிங், இஷா கோபிகர், யோகி பாபு, கருணாகரன், உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். கேஜேஆர் ஸ்டுடியோஸ் மற்றும் 24 ஏஎம் ஸ்டுடியோஸ் நிறுவனங்கள் இந்த படத்தை தயாரித்து வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

More News

திரையுலகிற்கு வரும் 'கேப்டன் மில்லர்' இயக்குனரின் மனைவி.. முதல் படம் குறித்த அறிவிப்பு..!

தனுஷ் நடித்து வரும் 'கேப்டன் மில்லர்' என்ற திரைப்படத்தை இயக்கி வரும் இயக்குனர் அருண் மாதேஸ்வரன் மனைவி ரஞ்சனி திரையுலகிற்கு வருகை தர உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.  

'லியோ' படத்தின் பிசினஸ் இத்தனை கோடியா? தமிழ் சினிமா வரலாற்றில் முதல்முறை..!

தமிழ் சினிமா வரலாற்றில் முதல்முறையாக 'லியோ' திரைப்படம் கிட்டத்தட்ட 500 கோடி ரூபாய்க்கு பிசினஸ் நடத்தி உள்ளதாக கூறப்படும் செய்தி கோலிவுட் வட்டாரத்தில் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது 

மனைவி, குழந்தையுடன் திருப்பதி சென்ற பிரபுதேவா.. வைரல் வீடியோ..!

நடிகர், நடன இயக்குனர், இயக்குனர் பிரபு தேவா சமீபத்தில் திருமணம் செய்து கொண்ட நிலையில் அவர் தனது மனைவி மற்றும் குழந்தையுடன் திருப்பதிக்கு சென்ற வீடியோ இணையதளங்களில் வைரலாகி வருகிறது.

முன்னாள் முதல்வர் குறித்து சர்ச்சை பதிவு.. கைதாகிறாரா 'ஜெயிலர்' பட நடிகர்..!

'ஜெயிலர்' படத்தில் முக்கிய கேரக்டரில் நடித்துள்ள நடிகர், முன்னாள் முதல்வர் குறித்து சர்ச்சைக்குரிய பதிவு செய்ததை அடுத்து அவர் கைதாக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

'நீ இல்லாமல் நான் என்ன செய்வேன்? பிக்பாஸ் ராம் ராமசாமியின் காதலி இவர் தானா?

பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போட்டியாளர்களில் ஒருவரான ராம் ராமசாமி இளம் பெண் ஒருவருடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்து 'நீ