முதல் படம், 50வது படம், 100வது படம்: வெங்கட்பிரபுவுடன் இணைந்த பிரபலம்!

பிரபல இயக்குனர் வெங்கட் பிரபுவுடன் முதல் படத்தில் பணிபுரிந்த தொழில்நுட்ப கலைஞர் ஒருவர், அவரது 50வது படத்திலும் 100வது படத்திலும் வெங்கட்பிரபு உடன் பணிபுரிந்த அபூர்வ ஒற்றுமை குறித்த தகவல் தற்போது வெளிவந்துள்ளது

வெங்கட்பிரபு இயக்கிய முதல் திரைப்படமான ’சென்னை 600028’ என்ற திரைப்படத்தின் எடிட்டராக அறிமுகமானவர் பிரவீன் கே.எல். இவர் வெங்கட்பிரபு இயக்கத்தில் சூர்யா நடித்த ’மாஸ் என்ற மாசிலாமணி’ என்ற திரைப்படத்திலும் எடிட்டராக பணிபுரிந்தார் என்பதும், இந்த படம் அவரது ஐம்பதாவது படம் என்பதும் குறிப்பிடத்தக்கது. அதேபோல் தற்போது வெங்கட் பிரபு நடிப்பில் சிம்பு நடித்து வரும் ’மாநாடு’ திரைப்படத்திற்கும் பிரவீன் கே.எல். தான் எடிட்டர் என்பதும் இந்தப் படம் பிரவீன் அவர்களின் 100வது படம் என்பதும் குறிப்பிடத்தக்கது

எனவே முதல் படம், 50வது படம், நூறாவது படம் என வெங்கட் பிரபுவுடன் இணைந்து பணியாற்றிய பிரவீனை வாழ்த்தி வெங்கட்பிரபு தனது டுவிட்டர் பக்கத்தில் டுவிட் ஒன்றை பதிவு செய்துள்ளார். அதில் அவருடன் இணைந்து மேலும் பல திரைப்படங்களில் பணிபுரிய ஆவலாக இருப்பதாகவும் வெங்கட்பிரபு தெரிவித்துள்ளார்.

More News

மணிரத்னத்தின் “பொன்னியின் செல்வன்“ நடிகர்கள்… ஏற்று நடிக்கும் கதாபாத்திரம், தனித்தன்மைகள்!

பிரபல எழுத்தாளர் கல்கி எழுதிய சோழ ராம்ராஜ்ஜியத்தின் வரலாற்றைக் கூறும் நாவல் “பொன்னியின் செல்வன்”.

கமல்ஹாசனை தூக்கி கையில் வைத்துள்ள சிவாஜி: நினைவு நாளில் பகிர்ந்த புகைப்படம்!

நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்கள் கடந்த 2001ஆம் ஆண்டு இதே நாளான ஜூலை 21ஆம் தேதி மறைந்தார் என்பதும் அவரது மறைவிற்கு ஒட்டுமொத்த இந்திய திரையுலகமே இரங்கல் தெரிவித்தது

கமல் கூறும் கட்டிப்பிடி வைத்தியம்....! இதில் உள்ள சுவாரஸ்யமான நன்மைகள் என்னென்ன...?

மனிதன் ஆரோக்கியமாக வாழ்வதற்கு  உணவும், உடற்பயிற்சியும் தேவையான ஒன்று. இதையும் தாண்டி மன நிம்மதி மற்றும் சந்தோஷத்திற்கு,

புதிய மீன்பிடி சட்ட வரைவை திரும்ப பெறவில்லையெனில் கடும் போராட்டம் நடக்கும்....! ஒன்றியஅரசுக்கு சீமான் எச்சரிக்கை....!

வாழையடி வாழையாக மீன் தொழில் செய்து வரும் நம் ஊரில் உள்ள மீனவர்களை, பன்னாட்டு நிறுவனங்களின்

அருள்நிதியின் அடுத்த பட டைட்டிலுடன் கூடிய ஃபர்ஸ்ட்லுக் ரிலீஸ்!

தமிழ் திரை உலகின் இளையதலைமுறை நடிகர்களில் ஒருவரான அருள்நிதி தனக்கேற்ற கதையம்சம் கொண்ட படங்களை தேர்வு செய்து நடித்து வருகிறார்