'மாநாடு' டிரைலர் குறித்த ஆச்சரிய தகவல் அளித்த எடிட்டர் ப்ரவீண் கே.எல்!
Send us your feedback to audioarticles@vaarta.com
சிம்பு நடிப்பில், வெங்கட் பிரபு இயக்கத்தில், யுவன் ஷங்கர் ராஜா இசையில் உருவான ’மாநாடு’ திரைப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்த நிலையில் இந்த படத்தின் தொழில்நுட்ப பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் இந்த படத்தின் டிரைலர் நாளை காலை 11:25 மணிக்கு வெளியாகும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் ’மாநாடு’ படத்தின் டிரைலர் குறித்த ஒரு ஆச்சரியமான தகவலை இந்த படத்தின் எடிட்டர் பிரவீன் அவர்கள் தெரிவித்துள்ளார்.
’மாநாடு’ டிரெய்லர் 2 நிமிடம் 09 விநாடிகள் ஓடும் என்றும் சிம்புவின் ரசிகர்கள் இந்த டிரைலரை பார்த்து மிகுந்த ஆச்சரியப்படுவார்கள் என்றும் அந்த அளவுக்கு செம சூப்பராக இந்த டிரைலர் உருவாகியிருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார். அவருடைய இந்த பதிவால் ’மாநாடு’ டிரைலருக்கு எதிர்பார்ப்பு எதிகரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
மேலும் வெங்கட்பிரபு இயக்கிய முதல் திரைப்படமான ’சென்னை 600028’ என்ற திரைப்படத்தில் தான் எடிட்டராக அறிமுகமானவர் பிரவீன் கே.எல் என்பதும், அதேபோல் வெங்கட்பிரபு இயக்கத்தில் சூர்யா நடித்த ’மாஸ் என்ற மாசிலாமணி’ என்ற திரைப்படத்திலும் அவர் எடிட்டராக பணிபுரிந்தார் என்பதும், இந்த படம் அவரது ஐம்பதாவது படம் என்பதும் அதேபோல் தற்போது ’மாநாடு’ திரைப்படத்திற்கும் பிரவீன் கே.எல். தான் எடிட்டர் என்பதும் இந்தப் படம் பிரவீன் அவர்களின் 100வது படம் என்பதும் குறிப்பிடத்தக்கது.
In ♥️♥️♥️with #MaanaaduTrailer. ??????
— Editor PraveenKl (@Cinemainmygenes) October 1, 2021
⌛⌛⌛ 2:09 ⌛⌛⌛ I'm sure fans of @SilambarasanTR_ n @vp_offl will go wild.
?????????????????? @sureshkamatchi @STR_360 @StrDeejay #Timeloop#Maaanadudeepavali#urtimestartsagain#STR
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com