ஒரே நேரத்தில் மாபெரும் வெற்றி பெற்ற மகன்களின் திரைப்படங்கள்: பெற்றோர் பெருமிதம்!
Send us your feedback to audioarticles@vaarta.com
அண்ணன் மோகன் ராஜா இயக்கிய ’காட்பாதர்’ திரைப்படம் மற்றும் தம்பி ஜெயம் ரவி நடித்த ’பொன்னியின் செல்வன்’ ஆகிய இரண்டு திரைப்படங்களும் கிட்டத்தட்ட ஒரே நேரத்தில் மாபெரும் வெற்றி பெற்றுள்ளதை அடுத்து மோகன் ராஜா, ஜெயம் ரவி சகோதரர்களின் பெற்றோர் பெருமிதம் அடைந்துள்ளனர்.
செப்டம்பர் 30ஆம் தேதி வெளியான ’பொன்னியின் செல்வன்’ திரைப்படத்தில் ராஜராஜசோழன் என்ற கேரக்டரில் ஜெயம் ரவி நடித்து இருந்தார் என்பதும் இந்த படம் மிகப்பெரிய வெற்றி பெற்றதை அடுத்து ஜெயம் ரவிக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
அதேபோல் ஜெயம் ரவியின் சகோதரரும் இயக்குனருமான மோகன் ராஜா இயக்கத்தில் உருவான ‘காட்பாதர்’ என்ற திரைப்படம் அக்டோபர் 5ஆம் தேதி வெளியாகி சூப்பர் வெற்றி பெற்றுள்ளது. சிரஞ்சீவி மற்றும் நயன்தாரா நடித்த இந்த படம் தெலுங்கு மாநிலங்களில் கோடிகளை அள்ளி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் மோகன் ராஜா மற்றும் ஜெயம் ரவி ஆகியோர்களின் தந்தை எடிட்டர் மோகன் தனது மனைவியுடன் ‘பொன்னியின் செல்வன் மற்றும் ’காட்பாதர்’ ஆகிய இரண்டு படங்களின் போஸ்டர்களின் அருகே நின்று எடுத்துக் கொண்ட புகைப்படம் இணையதளத்தில் வைரலாகி வருகிறது. தனது இரண்டு மகன்களின் திரைப்படங்கள் கிட்டத்தட்ட ஒரே நேரத்தில் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்றுள்ளதற்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.
இந்த நிலையில் இந்த புகைப்படத்தை மோகன்ராஜா தனது டுவிட்டரில் பகிர்ந்து ’பெருமைமிகு பெற்றோர்கள்’ என்று குறிப்பிட்டுள்ளார். இந்த ட்வீட்டுக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
Proud parents !!!#PS1#Godfather https://t.co/93Tfnu5G4A pic.twitter.com/nESQ4EiA1b
— Mohan Raja (@jayam_mohanraja) October 7, 2022
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com