பிரபல எடிட்டர் திடீர் மரணம்: திரையுலகினர் இரங்கல்
- IndiaGlitz, [Wednesday,November 04 2020]
பிரபல எடிட்டர் கோலா பாஸ்கர் என்பவர் திடீரென காலமானதை அடுத்து அவருக்கு திரையுலகினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
தமிழ் தெலுங்கு படங்களில் எடிட்டராக பணிபுரிந்தவர் கோலா பாஸ்கர். இவர் தமிழில் ’7ஜி ரெயின்போ காலனி’ ’ஒரு கல்லூரியின் காதல்’ ’புதுப்பேட்டை’ ’கேடி’ ’போக்கிரி’ ’யாரடி நீ மோகினி’ ’கண்டேன் காதலை’ ’ஆயிரத்தில் ஒருவன்’ ’வை ராஜா வை’ உள்பட பல படங்களுக்கு எடிட்டிங் செய்துள்ளார்.
அதுமட்டுமின்றி இயக்குனர் செல்வராகவன் மனைவி கீதாஞ்சலி இயக்கிய ’மாலை நேரத்து மயக்கம்’ என்ற திரைப்படத்தை தயாரித்து உள்ளார் என்பதும் இந்த படத்தில் இவருடைய மகன் பாலகிருஷ்ணா ஹீரோவாக அறிமுகமானார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் எடிட்டர் கோலா பாஸ்கர் கடந்த சில நாட்களாக தொண்டப்புற்று நோயால் அவதிப்பட்டு அதற்காக சிகிச்சை எடுத்து வந்த நிலையில் சிகிச்சையின் பலனின்றி இன்று ஐதராபாதில் உள்ள தனது வீட்டில் காலமாகி விட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளது. இதனை அடுத்து திரைப்படம் தமிழ் தெலுங்கு திரையுலக பிரமுகர்கள் அவருக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.