குடும்பத்துடன் வந்து வாக்களித்த எடப்பாடியார்...!
Send us your feedback to audioarticles@vaarta.com
வாக்களிக்கும் இடம் வரை தனது பேரனை அழைத்து சென்று, எடப்பாடி பழனிச்சாமி வாக்களித்தார்.
தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல், இன்று அதிகாலை 7 மணி முதல் நடைபெற்று வருகிறது. மக்கள் அனைவரும் சமூக இடைவெளியை பின்பற்றி வாக்களித்து வருகிறார்கள். கொரோனா தீவிரமாக இருப்பதாலும் பலரும் பாதுகாப்பு நடவடிக்கைகளை பின்பற்றி வாக்களிக்கிறார்கள். ஓட்டுப்போடும் நபர்களுக்கு, சானிடைசர் கொடுக்கப்பட்டு, கையுறையும் வாக்குச்சாவடியில் தரப்படுகிறது. இதன்பின்பு தான் வாக்குச்சாவடிக்குள் அவர்கள் அனுமதிக்கிறார்கள். இன்று காலையிலிருந்தே அரசியல் தலைவர்கள் ஸ்டாலின்,சீமான், உதயநிதி உட்பட பலரும் வாக்களித்தனர். நடிகர்கள்,விஜய்,சூர்யா மற்றும் அஜித் குடுபத்துடன் வந்து வாக்களித்தனர்.
இந்நிலையில் அதிமுக-வின் கூட்டணி முதல்வர் வேட்பாளரும், எடப்பாடி சட்டமன்ற தொகுதியின் வேட்பாளரான பழனிச்சாமி அவர்கள், தனது சொந்த ஊரான சிலுவம்பாளையத்தில் சென்று வாக்களித்தார். வீட்டிலிருந்து அலுவலகத்திற்கு நடந்து வந்த எடப்பாடியாருடன் மனைவி ராதா மற்றும் மகன் மிதுன் உடனிருந்தனர். வாக்குச்சாவடிக்குள் தனது பேரனை எடுத்துச்சென்ற முதல்வர் ஜனநாயக கடமையை ஆற்றினார். மேலும் அனைவரும் கடமையை தவறாமல் செய்ய வாக்களியுங்கள் என்று கூறினார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Nithya Ramesh
Contact at support@indiaglitz.com