எம்.ஜி.ஆருக்கு பின் தமிழக அரசியலில் முதல்முறையாக நடந்த அதிசயம்
Send us your feedback to audioarticles@vaarta.com
புரட்சித்தலைவர் எம்ஜிஆர் முதல்வராக இருந்தபோது எதிர்க்கட்சி தலைவராக இருந்த கலைஞர் கருணாநிதியுடன் கருத்துவேறுபாடு இருந்தாலும் பரஸ்பரம் ஒருவரை ஒருவர் பார்த்து புன்னகைப்பதும், நலம் விசாரிப்பதுமான அரசியல் நாகரீகம் இருந்தது. ஆனால் எம்ஜிஆர் மறைவிற்கு பின்னர் முதல்வரும் எதிர்க்கட்சி தலைவரும் எதிரிகள் போல் செயல்பட்டனர். அதுமட்டுமின்றி எதிர்க்கட்சி தலைவராக ஜெயலலிதா இருந்தபோதும் சரி, கருணாநிதி இருந்தபோதும் சரி, சட்டசபைக்கு செல்வதையே தவிர்த்தனர்.
இந்த நிலையில் பல வருடங்களுக்கு பின்னர் மீண்டும் தமிழக அரசியலில் அதிசயம் ஏற்பட்டுள்ளது. கடந்த இரண்டு நாட்களுக்கு முன் கண் சிகிச்சை செய்து கொண்ட எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று சட்டமன்றத்திற்கு வந்தபோது அவரிடம் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் அமைச்சர்கள் நலம் விசாரித்தனர்.
அதேபோல் சபாநாயகர் தனபால் சமீபத்தில் உடல்நலக்கோளாறு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றார். அவர் இன்று மீண்டும் சட்டமன்றத்திற்கு வந்தபோது அவரிடம் மு.க.ஸ்டாலின் நலம் விசாரித்தார். இந்த அரசியல் நாகரீகம் தொடர வேண்டும் என்பதே அனைவரின் விருப்பமாக உள்ளது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Contact at support@indiaglitz.com