அம்மா வழியில் பெண்களுக்கு நலத்திட்டம்… முதல்வர் வாக்குறுதி!
Send us your feedback to audioarticles@vaarta.com
நேற்று (மார்ச் 8) மகளிர் தினத்தை முன்னிட்டு அனைத்துப் பெண்களுக்கும் தனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டார் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி. அதோடு மேலும் அம்மா வழியில் பெண்களுக்கு அனைத்து நலத்திட்டங்களும் கொண்டு வரப்படும் என்றும் வாக்குறுதி அளித்து இருந்தார்.
இந்த அறிவிப்பை ஒட்டி நேற்று செய்தியாளர்களிடம் பேசிய தமிழக முதல்வர் ஒவ்வொரு குடும்ப அட்டைத்தாரப் பெண்களுக்கும் 6 கேஸ் சிலிண்டர் இலவசமாக வழங்கப்படும் என்றும் பொருளாதார சமநிலையை மேம்படுத்துவதற்காக ரூ.1,500 ஊதியத் தொகை கொடுக்கப்படும் என்றும் தெரிவித்து இருந்தார். இந்த அறிவிப்பை ஒட்டி பலரும் தமிழக முதல்வருக்குப் பலரும் பாராட்டுகளைத் தெரிவித்து வருகின்றனர்.
அதிமுக அரசு தமிழகத்தில் முதன் முறையாக உள்ளாட்சித் தேர்தல்களில் 50% ஒதுக்கீடு செய்து அத்திட்டத்தை கடந்த உள்ளாட்சித் தேர்தலில் அமல்படுத்தவும் செய்தது. அதோடு இருசக்கர வாகனங்களுக்கு 25 ஆயிரம் மானியத் தொகை வழங்கி வேலைக்குச் செல்லும் பெண்களுக்கு பெரும் உதவியாக இருந்தது. அதோடு பெண்களின் கர்ப்பக் காலத்தில் ஊக்கத் தொகை, குழந்தைப் பிறக்கும்போது ஊக்கத்தொகை மற்றும் திருமணத்தின்போது தாலிக்கு 8 கிராம் தங்கம் போன்ற பல்வேறு நலத்திட்டங்களை அமல்படுத்தி இருந்தது. அந்த வகையில் தற்போது வரப்போகும் சட்டப்பேரவை தேர்தலுக்கும் முதல்வர் பல நலத்திட்டங்களை அறிவிப்பார் என்று எதிர்ப்பார்ப்பு எழுந்துள்ளது.
மேலும் 46 தமிழ்நாடு மாநில துப்பாக்கி சுடும் போட்டி சென்னையில் நடைபெற்றது. இந்தப் போட்டியில் நடிகர் அஜித் குமார் 6 பதக்கங்களை வென்று இருந்தார். அவருக்கு பாராட்டுகளையும் வாழ்த்துகளையும் துணை முதல்வர் ஓபிஎஸ் தெரிவித்துக் கொண்டார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Nithya Ramesh
Contact at support@indiaglitz.com