மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் அஜித்.. எடப்பாடி பழனிசாமி சொன்னது என்ன தெரியுமா?
Send us your feedback to audioarticles@vaarta.com
நடிகர் அஜித்குமார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில் அவர் விரைவில் குணமடைய வாழ்த்துகிறேன் என முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தனது சமூக வலைதளத்தில் தெரிவித்துள்ளார்.
நடிகர் அஜித்குமார் நேற்று சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார் என்று கூறப்பட்ட நிலையில் அவரது தரப்பிலிருந்து உடல் பரிசோதனை செய்யவே மருத்துவமனை சென்றதாக கூறப்பட்டது.
இந்த நிலையில் அஜித்துக்கு மூளையில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டதாக ஊடகங்கள் மற்றும் சமூக வலைதளங்களில் செய்திகள் பரவிய நிலையில் இதற்கு அவரது மேனேஜர் மறுப்பு தெரிவித்து இருந்தார்.
அஜித்துக்கு நடந்த மருத்துவ பரிசோதனையின் போது அவரது காது அருகே நரம்பு வீக்கம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டதாகவும் அதற்காக மட்டுமே அஜித் சிகிச்சை எடுத்துக் கொண்டதாகவும் இன்று அல்லது நாளை அவர் டிஸ்சார்ஜ் ஆகிவிடுவார் என்றும் சுரேஷ் சந்திரா விளக்கம் அளித்து இருந்தார்.
இந்த நிலையில் அஜித் விரைவில் குணமாக அவரது ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வரும் நிலையில் முன்னாள் முதல்வரும் எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி தனது சமூக வலைத்தளத்தில் அஜித்துக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். அவர் இது குறித்து கூறியிருப்பதாவது:
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் சகோதரர் நடிகர் அஜித்குமார் அவர்கள் விரைவில் பூரண நலம் பெற வாழ்த்துகிறேன்.
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் சகோதரர்
— Edappadi K Palaniswami (@EPSTamilNadu) March 8, 2024
நடிகர் அஜித்குமார் அவர்கள் விரைவில் பூரண நலம் பெற வாழ்த்துகிறேன்.#Ajithkumar
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments