நடிகை கவுதமிக்கு முக்கிய பொறுப்பு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி: திரையுலகினர் வாழ்த்து..!
Send us your feedback to audioarticles@vaarta.com
நடிகை கவுதமி கடந்த சில மாதங்களுக்கு முன்பு அதிமுகவில் இணைந்த நிலையில், அவருக்கு முக்கிய பதவியை அதிமுகவின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி வழங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அதிமுக கொள்கை பரப்பு துணைச் செயலாளர் என்ற பதவியை கவுதமிக்கு வழங்கியுள்ளதாக அதிமுக வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. அதேபோல், துணைச் செயலாளர் பதவியை தடா து.பெரியசாமி அவர்களுக்கு வழங்கி, எடப்பாடி பழனிச்சாமி உத்தரவு பிறப்பித்துள்ளார்.
கடந்த பல ஆண்டுகளாக பாஜகவில் இருந்த நடிகை கவுதமி, கடந்த பிப்ரவரி மாதம் எடப்பாடி பழனிச்சாமி முன்னிலையில் அதிமுகவில் இணைந்தார். இந்த நிலையில், அதிமுகவில் இணைந்த சில மாதங்களில் அவருக்கு முக்கிய பதவி வழங்கப்பட்டுள்ளது. இதையடுத்து அதிமுக தொண்டர்கள் மற்றும் திரையுலகினர் அவருக்கு வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.
மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் 'புரட்சித் தமிழர்' திரு. @EPSTamilNadu அவர்களின் முக்கிய அறிவிப்பு. pic.twitter.com/UUpgr1DGkH
— AIADMK - Say No To Drugs & DMK (@AIADMKOfficial) October 21, 2024
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com