எடப்பாடி வடிவில் மறைந்த முதல்வர் ஜெயலலிதாவையே பார்த்தேன்… புகழ்ந்து தள்ளும் முக்கிய அமைச்சர்!
Send us your feedback to audioarticles@vaarta.com
தமிழகத்தில் சட்டப் பேரவைத் தேர்தலுக்கான தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு உள்ளது. இதற்கான அறிவிப்பை தேர்தல் ஆணையர் டெல்லியில் இருந்து கடந்த 26 ஆம் தேதி மாலை வெளியிட்டார். இந்த அறிவிப்பு வெளிவருவதற்கு ஒரு சில நிமிடங்களுக்கு முன்னர் தமிழகச் சட்டப்பேரவையில் பேசிய, தமிழக முதல்வர் அடுக்கடுக்கான அறிவிப்புகளை வெளியிட்டார். அதில் கூட்டுறவு நகைக்கடன் தள்ளுபடி, சுயஉதவிக் குழுக்களில் பெற்றப்பட்டு இருந்த கடன் தள்ளுபடி மேலும் வன்னியர் பிரிவினருக்கான உள்இடஒதுக்கீடு குறித்த அறிவிப்புகளை எல்லாம் வெளியிட்டார்.
இந்த அறிவிப்புகள் அனைத்தும் மிக விரைவாக நடந்து முடிந்து வெளியிடப்பட்டன. அப்போது பேசிய தமிழக முதல்வரைப் பார்த்து அமைச்சர்கள் பலரும் மிரண்டு போயினர். மேலும் அவருடைய துரிதமான பேச்சுக்கும் அதிரடியான அறிவிப்புக்கும் சட்டப்பேரவையில் இருந்து பெரும்பாலான எம்எல்ஏக்கள் பாராட்டுகளைத் தெரிவித்துக் கொண்டனர்.
அந்த வகையில் தகவல் மற்றும் விளம்பரத் துறை அமைச்சர் கடம்பூர் ராஜு சட்டமன்றக் கூட்டத் தொடர் நடைபெற்ற இறுதிநாளில் பேசிய தமிழக முதல்வரை பார்த்து தான் மெய் சிலிர்த்து விட்டதாகவும் அன்று பேசியது அவராகப் பேசவில்லை, ஜெயலலிதாவின் ஆன்மாதான் பேசியது எனவும் தெரிவித்து உள்ளார். மேலும் சட்டப் பேரவையில் பேசிய தமிழக முதல்வரை, சிறந்த முதல்வர் என்று பிரதமர் மோடியும் பாராட்டி உள்ளார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Nithya Ramesh
Contact at support@indiaglitz.com