அவர் ஹீரோவா? எதிர்க்கட்சி தலைவரை விமர்சித்த தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி!
Send us your feedback to audioarticles@vaarta.com
தமிழகத்தில் சட்டச்சபை தேர்தலுக்கான பிரச்சாரம் தற்போது சூடுபிடித்து இருக்கிறது. இத்தேர்தலில் அதிமுக-பாமக-பாஜக மெகா கூட்டணி வைத்து தேர்தலை சந்தித்திக்க உள்ளது. அதேபோல திமுக-காங்கிரஸ்-விசிக-மாக்சிஸ்ட்-கம்யூனிஸ்ட்-மதிமுக என மற்றொரு மெகா கூட்டணியுடன் திமுகவும் தேர்தலில் தீவிரம் காட்டி வருகிறது. இந்தக் கூட்டணிகளைத் தவிர மநீம-ஐஜேக-சமக என்ற கூட்டணியும் அமமுக-தேமுதிக கூட்டணியும் தனித்து சீமானும் எனப் பலமுனை போட்டி நிலவுகிறது.
இத்தேர்தலை ஒட்டி அனைத்துக் கட்சிகளும் தங்களது தேர்தல் அறிக்கையை வெளியிட்டு இருக்கின்றன. இந்நிலையில் தேர்தல் பிரச்சாரத்தின் போது அதிமுக முதல்வர் வேட்பாளர் திரு எடப்பாடி பழனிசாமி, எதிர்க்கட்சித் தலைவரான மு.க.ஸ்டாலினை விமர்சித்து கருத்துக் கூறி இருந்தார். அதில் கஷ்டம் என்றால் என்னவென்றே தெரியாதவர் மு.க.ஸ்டாலின் அவர்கள் என விமர்சித்து இருந்தார். அதோடு தமிழகத்திற்கு அதிமுக அரசு பல்வேறு நலத்திட்டங்களை கொண்டு வந்துள்ளது.
அதிலும் குறிப்பாக டெல்டா மாவட்டங்களை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலாமாக மாற்றி இருக்கிறோம். இது நிரந்தர வேளாண் பாதுகாப்பை கருத்தில் கொண்டு கொண்டு வரப்பட்டது எனவும் தமிழக முதல்வர் விளக்கம் அளித்து இருந்தார். மேலும் ஏழை, எளிய மக்களின் துயர் துடைப்பதை நோக்கமாகக் கொண்டது அதிமுக அரசு என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments