எதிர்க்கட்சியின் விமர்சனத்துக்கு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி கொடுத்த பதிலடி!
Send us your feedback to audioarticles@vaarta.com
தமிழக விவசாயிகளின் கூட்டுறவு பயிர்க்கடனை தள்ளுபடி செய்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு வெளியிட்டார். இத்திட்டத்தைக் குறித்து எதிர்க்கட்சியை சார்ந்த சிலர் விமர்சனம் வைத்து இருந்தனர். அதில் திமுகவின் செயல் திட்டத்தைத்தான் தமிழக முதல்வர் செயல்படுத்தி விட்டார் எனக் கூறியிருந்தனர். இந்த விமர்சனத்துக்கு பதிலடி கொடுத்த தமிழக முதல்வர் திமுக எம்பிக்கள் யாரும் நாடாளுமன்றத்தில் விவசாயக் கடன் தள்ளுபடி செய்வது குறித்து குரல் எழுப்பி இருந்தார்களா? என வாக்குச் சேகரிப்பின்போது அதிரடி கேள்வி எழுப்பினார்.
மேலும் இப்போது உள்ள நாகரிக உலகத்தில் குறைகளை எல்லாம் பெட்டியில் போடாதீர்கள். செல்போன் வழியாக தெரிவுயுங்கள். இதற்காக விரைவில் புதிய திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது எனக் குறிப்பிட்டார். இதற்காக செல்போன் மூலம் மக்கள் குறைதீர்க்கும் திட்டத்தை ஒரு வாரத்தில் தொடங்க உள்ளதாகவும் தமிழக முதல்வர் மக்கள் மத்தியில் பேசினார்.
மேலும் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ள 7 பேரின் விடுதலை விவகாரத்தில் திமுக நடகமாடுகிறது. எழுவர் விடுதலை குறித்து அவர்கள் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் கருணை மனுவையும் நிராகரித்தனர். ஆனால் இந்த விவகாரம் குறித்து விரைந்து முடிவெடுக்குமாறு தொடர்ந்து வலியுறுத்தி வருவது எந்த வகையில் சரியாகும் எனத் தமிழக முதல்வர் விளக்கம் அளித்தார்.
மேலும் எதிர்க்கட்சி தலைவர் துணை முதல்வராகவும் மேயராகவும் இருந்தபோது இப்படி தமிழகம் முழுவதும் சுற்றுப் பயணம் செய்தாரா? தற்போது தேர்தலை ஒட்டி பயணம் மேற்கொள்ளுவதை எப்படி எடுத்துக் கொள்ளுவது எனவும் கேள்வி எழுப்பினார். இவ்வாறு எதிர்க்கட்சிகளின் பல்வேறு விமர்சனங்களுக்கு தமிழக முதல்வர் ஆவடி பகுதியில் பேசியபோது தக்கப் பதிலடி வழங்கினார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Nithya Ramesh
Contact at support@indiaglitz.com