எதிர்க்கட்சியின் விமர்சனத்துக்கு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி கொடுத்த பதிலடி!

தமிழக விவசாயிகளின் கூட்டுறவு பயிர்க்கடனை தள்ளுபடி செய்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு வெளியிட்டார். இத்திட்டத்தைக் குறித்து எதிர்க்கட்சியை சார்ந்த சிலர் விமர்சனம் வைத்து இருந்தனர். அதில் திமுகவின் செயல் திட்டத்தைத்தான் தமிழக முதல்வர் செயல்படுத்தி விட்டார் எனக் கூறியிருந்தனர். இந்த விமர்சனத்துக்கு பதிலடி கொடுத்த தமிழக முதல்வர் திமுக எம்பிக்கள் யாரும் நாடாளுமன்றத்தில் விவசாயக் கடன் தள்ளுபடி செய்வது குறித்து குரல் எழுப்பி இருந்தார்களா? என வாக்குச் சேகரிப்பின்போது அதிரடி கேள்வி எழுப்பினார்.

மேலும் இப்போது உள்ள நாகரிக உலகத்தில் குறைகளை எல்லாம் பெட்டியில் போடாதீர்கள். செல்போன் வழியாக தெரிவுயுங்கள். இதற்காக விரைவில் புதிய திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது எனக் குறிப்பிட்டார். இதற்காக செல்போன் மூலம் மக்கள் குறைதீர்க்கும் திட்டத்தை ஒரு வாரத்தில் தொடங்க உள்ளதாகவும் தமிழக முதல்வர் மக்கள் மத்தியில் பேசினார்.

மேலும் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ள 7 பேரின் விடுதலை விவகாரத்தில் திமுக நடகமாடுகிறது. எழுவர் விடுதலை குறித்து அவர்கள் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் கருணை மனுவையும் நிராகரித்தனர். ஆனால் இந்த விவகாரம் குறித்து விரைந்து முடிவெடுக்குமாறு தொடர்ந்து வலியுறுத்தி வருவது எந்த வகையில் சரியாகும் எனத் தமிழக முதல்வர் விளக்கம் அளித்தார்.

மேலும் எதிர்க்கட்சி தலைவர் துணை முதல்வராகவும் மேயராகவும் இருந்தபோது இப்படி தமிழகம் முழுவதும் சுற்றுப் பயணம் செய்தாரா? தற்போது தேர்தலை ஒட்டி பயணம் மேற்கொள்ளுவதை எப்படி எடுத்துக் கொள்ளுவது எனவும் கேள்வி எழுப்பினார். இவ்வாறு எதிர்க்கட்சிகளின் பல்வேறு விமர்சனங்களுக்கு தமிழக முதல்வர் ஆவடி பகுதியில் பேசியபோது தக்கப் பதிலடி வழங்கினார்.

More News

ஆபாசத்துக்கும் நிர்வாண கலைக்கும் வித்தியாசம் தெரியாதா? பிரபல நடிகை ஆவேசம்!

ஆபாசத்துக்கு நிர்வாண கலைக்கும் வித்தியாசம் தெரியாமல் தனது எட்டு வருட சமூக வலைதள கணக்கை முடக்கி விட்டார்கள் என பிரபல நடிகை ஒருவர் ஆவேசமாக தெரிவித்து இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

அருவருப்பின் உச்சம், கேவலத்திலும் கேவலம்: போட்டு தாக்கும் தங்கர் பச்சான்

தமிழக அரசியலை அருவருப்பின் உச்சம் என்றும் தமிழக அரசியல் குறித்த செய்திகளை வெளியிடும் ஊடகங்கள் கேவலத்திலும் கேவலம் என்றும் இயக்குனர் தங்கர்பச்சான் கூறியிருப்பது

பயிர்க்கடன் தள்ளுபடி- முதலமைச்சரை நேரில் சந்தித்து நன்றி தெரிவித்த விவசாயிகள்!

தமிழக விவசாயிகள் கூட்டுறவு வங்கிகளில் பெற்ற பயிர்கடன் 12,110 கோடி ரூபாயை தள்ளுபடி செய்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு வெளியிட்டார்.

இந்தியக் கிரிக்கெட் வீரருக்கு ஐசிசி விருது… குவியும் பாராட்டு!

ஜனவரி மாதத்திற்கான சிறந்த வீரராக இந்தியக் கிரிக்கெட் அணியின் முன்னணி வீரர் ரிஷப் பந்த் தேர்வு செய்யப்பட்டு இருக்கிறார்.

'மாஸ்டர்' படத்தின் ஒருவருட கொண்டாட்டம்: வைரலாகும் ஹேஷ்டேக்

தளபதி விஜய் நடிப்பில், இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், அனிருத் இசையில் உருவான 'மாஸ்டர்' திரைப்படம் கடந்த பொங்கல் தினத்தில் வெளியான நிலையில்