விஸ்வரூபம்' விஷயத்தில் நன்றி மறந்துவிட்டார் கமல். முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி
Send us your feedback to audioarticles@vaarta.com
உலகநாயகன் கமல்ஹாசன் சமீபகாலமாக தனது சமூக வலைத்தளத்தில் தெரிவித்து வரும் ஆவேசமாக கருத்துக்கள் ஒருசில அரசியல்வாதிகளை எரிச்சல் அடைய செய்துள்ளன. பெருவாரியான பொதுமக்களின் எண்ணங்களையே அவர் பிரதிபலித்து வருவதாக கூறப்பட்டு வரும் நிலையில் அவர் மீது பதில் தாக்குதல், போலீஸ் புகார் உட்பட அரசியல்வாதிகள் தங்கள் எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் கடந்த ஞாயிறு அன்று தனியார் தொலைக்காட்சி ஒன்றில் அவர் கொடுத்த பேட்டி அரசியல்வாதிகளை மேலும் ஆத்திரமூட்டியுள்ளது. கடந்த தேர்தலில் பொதுமக்கள் வேறு ஒரு தலைமைக்குத்தான் ஓட்டு போட்டார்கள் என்றும், இன்று அவர் உயிருடன் இல்லாததால் மீண்டும் தேர்தல் நடத்த வேண்டும் என்று ஆணித்தரமான கருத்தை அந்த பேட்டியில் பதிவு செய்தார்
கமல்ஹாசனின் இந்த கருத்துக்கு ஏற்கனவே அமைச்சர் ஒருவர் பதில் கூறியுள்ள நிலையில் நேற்று சேலத்தில் நடந்த அரசு விழாவில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியும் கமலுக்கு கண்டனம் தெரிவித்துள்ளார். ஆட்சி தொடரக்கூடாது என்று கூறும் கமல்ஹாசன் எந்த கிராமத்துக்காவது சென்று மக்களை சந்தித்திருப்பாரா என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
மேலும் விஸ்வரூபம் படம் வெளியாக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா உதவி செய்ததாகவும், அந்த நன்றியை கமல்ஹாசன் மறந்து விட்டு பேசுவதாகவும் கூறிய முதல்வர், 65 வயதுக்கு பிறகுதான் அவருக்கு ஞானோதயம் வந்துள்ளதாக கூறினார். ஆனால் உண்மையில் கமல்ஹாசனுக்கு 62 வயதுதான் ஆகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout