நெட்டிசன்கள் அர்ச்சனை எதிரொலி: முதல்வரின் அர்ச்சனை விளம்பரம் நீக்கம்

  • IndiaGlitz, [Wednesday,May 02 2018]

நெட்டிசன்கள் இணையதளங்களில் தொடர்ந்து பதிவு செய்த அர்ச்சனைகள் காரணமாக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு அர்ச்சனை செய்யும் விளம்பரம் நீக்கப்பட்டுள்ளது.

கடந்த சில நாட்களாக திரையரங்குகளில் தமிழக அரசின் விளம்பரப்படம் ஒன்று ஒளிபரப்பாகி வந்தது. இந்த விளம்பரத்தில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பெயருக்கு ஒரு பெண் அர்ச்சனை செய்வது போன்ற காட்சிகள் உள்ளது.

இந்த விளம்பரத்திற்கு சமூக இணையதளங்களில் காட்டமான விமர்சனங்களை நெட்டிசன்கள் பதிவு செய்தனர். இதனையடுத்து இந்த விளம்பரம் நீக்கப்படுவதாக அமைச்சர் ஜெயகுமார் தெரிவித்துள்ளார்.