ரூ.824 கோடி வங்கி மோசடி: பிரபல சென்னை நகைக்கடை அதிபர் கைது

  • IndiaGlitz, [Friday,May 25 2018]

இந்திய வங்கிகளில் கோடிக்கணக்கில் கடன் வாங்கிவிட்டு மோசடி செய்வது என்பது கடந்த சில வருடங்களாக சர்வ சாதரணமாக நடைபெற்று வரும் நிகழ்வாக உள்ளது. ஏற்கனவே விஜய்மல்லையா, நீரவ் மோடி உள்பட ஒருசில தொழிலதிபர்கள் பல்லாயிரம் கோடி வங்கிகளில் கடன்வாங்கிவிட்டு அதனை திரும்ப செலுத்தாமல் வெளிநாட்டில் சொகுசு வாழ்க்கை வாழ்ந்து வருகின்றனர்.

இந்த நிலையில் மேலும் ஒரு நகைக்கடை அதிபர் ரூ.824 கோடி வங்கி மோசடி செய்துள்ளதாக திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்துள்ளது. சென்னை தி.நகரில் உள்ள கனிஷ்க் நகைக்கடை அதிபர் பூபேஷ்குமார் ஜெயின் ரூ.824 கோடி வங்கி மோசடி செய்ததாக கைது செய்யப்பட்டுள்ளார். இவர் மீது கடந்த மார்ச் மாதமே வங்கி மோசடி குறித்த தகவல் வெளிவந்தது என்றாலும் அவர் தற்போதுதான் அமலாக்கத்துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது

போலியான ஆண்டு நிதி அறிக்கை தயாரித்து அதிக லாபம் காட்டி 14 வங்கிகளில் ரூ.824.15 கோடி மோசடியாக கடன் பெற்றதாகவும், பெற்ற கடனுக்கு செலுத்த வேண்டிய வட்டி மற்றும் நிலுவைத் தொகையை கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் செலுத்தவில்லை என்றும் இந்நிறுவனம் மீது குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

More News

கமல்ஹாசனை சந்தித்த கண்சிமிட்டல் நாயகி

கடந்த சில மாதங்களுக்கு முன் வெளிவந்த 'ஒரு ஆதார் லவ்' என்ற மலையாள படத்தின் டீசரில் ஒரே ஒரு கண்சிமிட்டல் மற்றும் புருவ நடனம் மூலம் இந்தியா முழுவதும் டிரெண்டுக்கு வந்தவர் நடிகை பிரியா வாரியர்.

ஐபிஎல் இறுதி போட்டியில் '2.0' டிரைலர்?

ஐபிஎல் இறுதி போட்டியின் இடையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த '2.0' திரைப்படத்தின் டிரைலர் வெளியாகவுள்ளதாக ஒரு செய்தி சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.

தமிழர்கள் கிட்ட மோதாதே: சிம்பு எச்சரிக்கை

தூத்துகுடியில் நடைபெற்று வரும் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தில் காவல்துறையினர் நடத்திய துப்பாக்கி சூடு சம்பவத்திற்கு கிட்டத்தட்ட கோலிவுட் திரையுலகினர் அனைவருமே கண்டனம் தெரிவித்துள்ளனர்.

ஆர்யாவின் மணமகளுக்கு அடித்த அதிர்ஷ்டம்

தனியார் தொலைக்காட்சி ஒன்றில் நடிகர் ஆர்யாவுக்கு பெண் தேடும் நிகழ்ச்சியான 'எங்க வீட்டு மாப்பிள்ளை' என்ற நிகழ்ச்சி ஒளிபரப்பானது என்பது அனைவரும் அறிந்ததே.

தூத்துகுடியில் மெல்ல திரும்பும் இயல்பு நிலை: கடைகள் திறப்பு, போக்குவரத்து ஆரம்பம்

தூத்துகுடியில் நடைபெற்ற துப்பாக்கி சம்பவத்தில் 13 பேர் பரிதாபமாக பலியான நிலையில் அம்மாவட்டம் முழுவதும் கடந்த மூன்று நாட்களாக பதட்ட நிலை இருந்தது.