ஆர்டர் செய்ததோ ஸ்மார்ட்போன், வந்ததோ சோப்புக்கட்டி
- IndiaGlitz, [Wednesday,September 13 2017]
தற்போதைய டெக்னாலஜி உலகில் பெரும்பாலான பொருட்கள் இகாமர்ஸ் இணையதளங்கள் மூலம் விற்பனை செய்யப்படுவதால் வாடிக்கையாளர்களும் அதன் மூலம் பொருட்களை வாங்கி வருகின்றனர்.
ஷோரூம் போகாமல் உட்கார்ந்த இடத்தில் இருந்தே ஆர்டர் செய்தால் வீடு தேடி பொருள் வருகிறது. இதனால் அலைச்சல், நேர விரயம், ஆகியவை இல்லை
இந்த நிலையில் டெல்லியை சேர்ந்த சிராஹ் தவான் என்பவர் முன்னணி இகாமர்ஸ் இணையதளம் ஒன்றின் மூலம் ஒன்ப்ளஸ் ஸ்மார்ட்போன் ஒன்றை ஆர்டர் செய்தார். குறிப்பிட்ட காலத்தில் அவருக்கு பார்சலும் வந்தது. ஆனால் அதில் ஸ்மார்ட்போனுக்கு பதில் சோப்புக்கட்டி இருந்ததால் அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து வாடிக்கையாளர் சேவை நிலையத்தில் அழைத்து பேசியும் எந்தவித திருப்தியான பதிலும் வராததால் அவர் பேஸ்புக்கில் இதுகுறித்த ஸ்டேட்டஸ் ஒன்றை பதிவு செய்துள்ளார்.