சுற்றுச்சூழல் பிரச்சாரம் - அண்டார்டிக்காவின் உருகும் பனிப்பாறைகளுக்கு நடுவே ஒரு நீச்சல் பயணம்
Send us your feedback to audioarticles@vaarta.com
ஒரு ஆய்வில் கீரின்லாந்தில் பனிப்பாறைகளின் உருகும் தன்மை அதிகரித்து விட்டதை கடந்த ஆண்டு சுற்றுச்சூழல் ஆய்வாளர்கள்
(Environmental Scientist) உறுதிப் படுத்தி இருந்தனர். இதனை அடுத்து உலக நாடுகள் முழுவதிலும் சுற்றுச்சூழல் மாசுபாட்டினைக் குறைக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டும் எனச் சூழல் ஆர்வலர்கள் தொடர்ந்து குரல் கொடுத்து வந்தனர். கடந்த மாதம் நடைபெற்ற உலகப் பொருளாதார மாநாட்டில் கூட உலகில் வெப்ப மயமாதல் அதிகரித்து விட்டதை சிறுமி கிரென்ட்டா துன்பெர்க் முதற்கொண்டு அனைத்து நாட்டுத் தலைவர்களும் பதிவு செய்திருந்தனர். உயிர்ச்சூழலை (Ecology) மாற்றியமைக்க வேண்டிய கடமை தொழில் நிறுவனங்களுக்கு மட்டுமல்லாது உலக நாடுகளின் அரசியல் தலைமைகளுக்கும் இருக்கிறது எனப் பொருளாதார மாநாட்டில் வலியுறுத்தப் பட்டது.
இந்நிலையில் உலக நாடுகள் உள்ள அனைவரது கவனத்தையும் சூழலியல் நோக்கி திரும்பும் விதமாக ஒருவர் செயல்பட்டுள்ளார். அதற்காக கிழக்கு அண்டார்டிக்காவின் உருகும் பனி ஏரியில் லூயிஸ் பாக் நீந்தியிருக்கிறார். அண்டார்ட்டிகாவின் பனிப் பாறை நீரில் நீந்தும் முதல் நபர் இவர் என்பதால் தற்போது அனைவரது கவனமும் அண்டார்டிக்காவின் உருகும் பனி பாறைகளைப் பற்றியதாக இருக்கிறது.
50 வயதான பாக், ஜனவரி 23 அன்று அண்டார்டிக்காவின் உருகும் பனி பாறைகளுக்கு நடுவில் இருக்கும் குளிர்ந்த நீரில் நீந்தி உலக நாடுகளின் பார்வையில் விழுந்துள்ளர். 32 டிகிரி (cold temperature) அளவுள்ள நீரில், சுமார் 10 நிமிடங்கள் நீச்சலிட்டார்.
அண்டார்டிக்காவில் பல இடங்களில் பனிப்பாறைகள் உருகி தற்போது சிறு சிறு ஓடைகளாகவும் ஏரிகளாகவும் நீரோட்டங்களை உருவாகியுள்ளன என்பது குறிப்பிடத் தக்கது. அடர்த்தியான பனிப்பாறைகளின் இறுகியத் தன்மை தற்போது வெகு வேகமாக தன் இயல்பில் இருந்து மாறி வருவதை ஆய்வில் கண்டுபிடித்து உள்ளனர்.
2017 ஜனவரியில் அண்டார்ட்டிகாவில் உள்ள supraglacial ஏரிகள் பற்றிய ஆய்வு தகவல்கள் வெளியிடப்பட்டு இருந்தன. இந்த ஆய்வு பனிப்பாறைகளில் மேற்பரப்பு உருகும் அளவுகளைக் கணக்கிடுவது பற்றியது ஆகும். அதில் 65,000 க்கும் அதிகமான பனிப்பாறைகள் கோடைக் காலத்தில் உருகும் தன்மையில் இருக்கின்றன என்று தெரிவிக்கப் பட்டிருந்தது. இது அண்டார்ட்டிக்காவின் ஒரு பகுதி மட்டுமே. ஒரு கன்று ஈந்தால் விழும் அளவிற்கு மட்டுமே தற்போது பனிப்பாறைகள் உருகும் தன்மையில் இருக்கிறது. ஆனால் அதன் பாதிப்பு என்பது அளவிட முடியாதது எனவும் குறிப்பிடப் பட்டுள்ளது.
இத்தகைய அதி வேகமான உருகும் நிலையை உலகிற்கு எடுத்துக் காட்டும் விதமாகவே பாக் நீந்தினார் என்பது குறிப்பிடத் தக்கது. “நாம் ஒரு அவசர கால நிலையில் இருக்கிறோம். இதனை தெரிந்து கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டிய கட்டாய சூழலில் அனைத்து நாடுகளும் இருக்கின்றன” என்று பாக் குறிப்பிட்டுள்ளார். அண்டார்டிக்காவின் குளிர்ந்த நீரில் நீந்துவதை ஒரு பிரச்சாரத்திற்கான ஒரு யுக்தியாகவே பாக் பயன்படுத்தி உள்ளார்.
மேலும், அண்டார்டிக்காவில் கடற்பரப்பில் இருந்து பனி உருகும் தன்மையைத் தெரிந்து கொள்ள சில ஆய்வுகள் மேற்கொள்ளப் பட்டது. இதற்காக “grounding zone,” தரை மட்டத்திற்கு அருகிலேயே துளையிட்டு ஆய்வாளர்கள் சோதனை மேற்கொண்டனர். அதில் நீரின் தன்மை சூடாக இருக்கிறது எனக் கண்டுபிடிக்கப் பட்டுள்ளது. கடல் நீரின் உறைநிலையில் இருந்து அதிகமாகவும் அதே நேரத்தில் பனி பாறைகளின் குளிர் தன்மைக்கு மாறாக 2 டிகிரி எஃப் (F) வெப்ப நிலையில் இருப்பதையும் கண்டறிந்துள்ளனர். இது பனிப்பாறைகளின் குளிர் தன்மையை விட மிகவும் சூடான நீர் என்பது ஆய்வில் தெரிய வந்துள்ளது. இது உலகளாவிய கடல் மட்ட உயர்வுக்கு வழிவகுக்கும் என்ற அச்சுறுத்தல் தற்போது ஏற்பட்டுள்ளது.
“நியூயார்க் பல்கலைக் கழகத்தின் சுற்றுச்சூழல் ஆய்வகத்தின் இயக்குனர் டேவிட் ஹாலண்ட் “அண்டார்ட்டிக்காவின் உள்ள பனிப்பாறைகளின் உருகும் தன்மையால், தற்போது உள்ள கடல் மட்டத்தை விட 3 அடி உயரும் அபாயம் இருக்கிறது. ஒரு வேளை இது நடந்தால் வரும் ஆபத்தினைக் கற்பனை கூட செய்து பார்க்க முடியவில்லை” என்று தெரிவித்துள்ளார்.
பனிப்பாறைகளில் தரை பகுதியில் இருந்து வெப்ப நிலையை அளவிடும் முயற்சியில் முதன் முறையாக விஞ்ஞானிகள் ஈடுபட்டனர். இதன் மூலம் மேற் பரப்பு மட்டுமல்லாமல் கீழே இருந்து பனிப்பாறைகள் உருகும் தன்மையை மிக எளிதாகக் கண்டறிய வாய்ப்பு உள்ளது எனவும் ஆய்வாளர்கள் தெரிவித்து உள்ளனர்.
மேலும் இந்த ஆய்வில் “தரை மட்டமாக பனி உருகும் தன்மையை கண்டறிய முற்பட்ட போது அவை ஒழுங்கின்றியும், சிறு சிறு நீரோடைகளாகவும் இருப்பது தெரிய வந்துள்ளது. பனிப்பாறைகளின் மேற்பரப்பில் மட்டுமல்லாது தரை மட்டத்தில் இருந்து உருகும் தன்மை மிக அதிகமாக இருக்கிறது என சுற்றுச் சூழல் ஆய்வாளர்கள் குறிப்பிட்டதை அடுத்து தற்போது உலக அளவில் பரபரப்பு அதிகமாகி இருக்கிறது.
நன்றி – grist.org
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
DhanaLakshmi
Contact at support@indiaglitz.com
Comments