ஊரடங்கின் எதிரொலி; பெண்களின் மீதான வன்முறை அதிகரித்துள்ளது!!! தேசிய மகளிர் ஆணையம் குற்றச்சாட்டு!!!

  • IndiaGlitz, [Saturday,April 18 2020]

 

கொரோனா தடுப்பு நடவடிக்கைக்காக இந்தியாவில் மார்ச் 23 முதல் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. ஊரடங்கு உத்தரவால் குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் தங்களது வீடுகளிலேயே முடங்கவேண்டிய கட்டாயம் இருந்துவருகிறது. எனவே வீட்டில் இருக்கும் பெண்களின் மீதான வன்முறை கட்டவிழ்த்து விடப்படும் என்று பலத் தரப்புகளில் இருந்து அச்சம் தெரிவிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் தேசிய மகளிர் ஆணையம் ஊரடங்கு காலங்களில் பெண்களின் மீதான வன்முறை அதிகரித்து இருப்பதாக குற்றம் சாட்டியிருக்கிறது.

மார்ச் 23 முதல் ஏப்ரல் 16 வரை 587 வழக்குகள் பெண்கள் மீதான வன்முறைக்கு எதிராக பதிவுசெய்யப்பட்டு இருப்பதாக தேசிய மகளிர் ஆணையம் தெரிவித்து இருக்கிறது. கொரோனா ஊரடங்கிற்கு முன்பு பிப்ரவரி 22 முதல் மார்ச் 22 வரை 396 வழக்குகள் பதிவாகியிருந்தது. இந்த 25 நாட்களில் பதிவான வழக்குகளை விட ஊரடங்கின்போது பதிவான வழக்குகள் அதிகம் எனவும் மகளிர் ஆணையம் தெரிவித்து இருக்கிறது.

மேலும், ஊரடங்கு காலங்களில் வழக்குகள் வாட்ஸ் ஆப் மற்றும் இணையத்தளத்தின் வழியாகவே பெறப்பட்டது எனவும் இந்தியாவில் இணையதளத்தைப் பயன்படுத்தத் தெரியாத கோடிக்கணக்கான பெண்கள் இருப்பதாகவும் தேசிய மகளிர் ஆணையம் கருத்து கூறியிருக்கிறது. பதிவு செய்யப்பட்ட வழக்குகள் குறைவு. ஆனால் தெரிவிக்கப்படாத வழக்குகள் அதிகம் எனவும் கவலைத் தெரிவித்து இருக்கிறது. 2015-2016 காலக்கட்டங்களில் 3 இல் ஒரு பங்கு பெண்கள் குடும்ப வன்முறையை அனுபவித்து இருப்பதாகப் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கிறது. ஆனால் இதில் 1 சதவீதத்திற்கும் குறைவான பெண்களே காவல் துறையினரை அணுகினர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

ஐ.நா. சபையின் தலைவர் ஆன்டோனியா குடெரெஸ், கொரோனா ஊடங்கின்போது பெண்கள் மீதான குடும்ப வன்முறை அதிகரிக்கும் எனவும் எனவே உலக நாடுகள் இதுகுறித்த பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் எனவும் முன்னதாகத் தெரிவித்து இருந்தார். இக்கருத்துக்கு ஆதரவு தெரிவித்து பிரெஞ்சு அரசாங்கம் ஊரடங்கு காலங்களில் பாதிக்கப்படும் பெண்களுக்கு தங்குவதற்கான விடுதிகளை அமைத்துக் கொடுத்தது என்பதும் குறிப்பிடத்தக்கது. இத்தாலியில் குடும்ப வன்முறையால் பாதிக்கப்படும் பெண்கள் எளிதாக காவல் துறையைத் தொடர்புகொள்வதற்கு வழிவகை செய்யப்பட்டுள்ளது.

சென்னையில் இயங்கிவரும் குற்றத்தடுப்பு மற்றும் பாதிக்கப்பட்ட பெண்களுக்கான சர்வதேச அமைப்பு பெண்களை பாதுகாக்கும் வகையில் ஊரடங்கிற்கு முன்னதகாவே சில நடவடிக்கைகளை எடுத்தது. இந்த அமைப்பைத் தொடர்பு கொண்டு பல பெண்கள் குற்றப் புகார்களை கூறிவருதாகவும் தேசிய மகளிர் ஆணையம் குறிப்பிட்டுள்ளது. இத்தகைய அமைப்புகளை தொடர்புகொள்ளும் பெண்களை பாதுகாப்பதற்கு தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது எனவும் தேசிய மகளிர் ஆணையம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து இந்தியாவின் முன்னணி வழக்கறிஞரான பிருந்தா குரோவர் வைரஸ் பரவிவரும் இத்தகைய நேரங்களில் பாதிக்கப்பட்ட பெண்கள் அவர்களது தாய் வீட்டிற்கு செல்லவோ அல்லது விடுதிகளுக்குச் செல்லவோ அனுமதிக்க வேண்டாம். அச்சத்தை வரவழைக்கும் அந்த ஆணை விடுதிக்கு அனுப்புவதே சரியான முடிவு எனத் தெரிவித்து இருக்கிறார். தேசிய ஊரடங்கு காலங்களில் அமைப்புச்சாரா தொழிலாளர்கள், பெண்கள், குழந்தைகள் என அனைவரது நலனையும் பாதுகாக்க வேண்டியது அரசின் முக்கியக் கடமையாகும்.

ஊரடங்கு காலங்களில் குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் ஒற்றுமையுடன் இப்பார்கள் எனக் கருதுவது தவறு. முன்பை விட, ஆண்கள் வீட்டில் இருக்கும்நேரம் அதிகம் என்பதால் அவர்களுக்கு எதிரான செயல்பாடுகள் அதிகரித்து காணப்படும். எனவே பெண்கள் மீதான வன்முறைக்கு தேவையான நடவடிக்கைகள் அவசியம் எனத் தற்போது பலத் தரப்புகளில் இருந்து கோரிக்கை வைக்கப்பட்டு வருகின்றன.

More News

அமேசான் பிரைமில் இருந்து நீக்கப்பட்ட சிவகார்த்திகேயன் படம்

சிவகார்த்திகேயன் நடிப்பில் பிஎஸ் மித்ரன் இயக்கத்தில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் வெளியான திரைப்படம் 'ஹீரோ'. இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றது என்பது தெரிந்ததே

சூர்யா-கார்த்தி ரசிகர்களுக்கு பிரபல தயாரிப்பாளரின் வேண்டுகோள்!

கொரோனா வைரஸ் காரணமாக தமிழகம் முழுவதும் கடந்த சில வாரங்களாக ஊரடங்கு உத்தரவு அமலில் இருப்பதை அடுத்து லட்சக்கணக்கான ஏழை எளிய மக்கள் வேலையின்றி, வருமானம் இன்றி பசியால் வாடுகின்றனர்.

மனைவி, குழந்தைகளுக்கு அரிசி-பருப்பு வாங்கி கொடுத்துவிட்டு தற்கொலை செய்த பெயிண்டர்

கடந்த சில வாரங்களாக இந்தியாவில் கொரோனா வைரஸ் மிக வேகமாக பரவி நூற்றுக்கணக்கான மனித உயிர்களை பலி வாங்கிக் கொண்டிருக்கும் நிலையில் கொரோனா வைரஸ் காரணமாக நாடு முழுவதும்

கொரோனாவால் சிகிச்சை பெற்று வரும் மகளின் வருகைக்காக காத்திருக்கும் தாயின் சடலம்!

இங்கிலாந்து நாட்டில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த தாய் மற்றும் மகள் ஆகிய இருவரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் கொரோனாவால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும்

மும்பையில் கொரோனா நோய்த்தொற்றினால் பாதிக்கப்பட்ட 20 கடற்படை மாலுமிகள்!!!

இந்தியாவில் கொரோனா நோய்த்தொற்றின் பாதிப்பு அதிகரித்துக்கொண்டே வருகிறது. இந்நிலையில் மகாராஷ்டிரா மாநிலம்,