கொரோனா எதிரொலி; எண்ணெய் உற்பத்தியை குறைக்க ஒபேக் நாடுகள் முடிவு!!!
Send us your feedback to audioarticles@vaarta.com
கச்சா எண்ணெய் ஏற்றுமதியை முறைப்படுத்தும் நோக்கில் 1960 களில் உருவாக்கப்பட்ட ஒபேக் கூட்டமைப்பில் இதுவரை 14 நாடுகள் உறுப்பு நாடுகளாக இருக்கின்றன. உலகம் முழுவதும் உள்ள கச்சா எண்ணெய் உற்பத்தியில் இந்த நாடுகளில் கையிருப்பு அதிகம். தற்போது கொரோனா தடுப்பு நடவடிக்கைக்காக உலகம் முழுவதுமே லாக்டவுனில் முடங்கியிருக்கிறது. பல நாடுகள் வாகனப்போக்குவரத்துக்கும் தடை விதித்து இருக்கிறது. எனவே கச்சா எண்ணெயின் தேவை பெருமளவு குறைந்திருக்கிறது. தேவை குறைவுக்காரணமாக கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைக்க ஒபேக் நாடுகள் முடிவெடுத்திருக்கின்றன.
மொத்த உற்பத்தியில் 10 விழுக்காடு குறைப்பது என ஒபேக் நாடுகள் நடத்திய வீடியோ கான்ஃபிரஸ் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டு இருக்கிறது. வழக்கமாக ஒபேக் நாடுகள் 9.7 மில்லியன் பேரல் கச்சா எண்ணெயை ஆண்டு ஒன்றிற்கு உற்பத்தி செய்து வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது. முன்னதாக, கொரோனா ஆரம்பக் கட்டத்தில் கச்சா எண்ணெய் குறைப்புக்கு அரபு நாடுகள் முடிவெடுத்தன. இதறகு ரஷ்யா எதிர்ப்பு தெரிவித்தது. இந்த வாக்குவாதத்தில் கச்சா எண்ணையின் விலை 30 விழுக்காடு குறைந்தது எனவும் குறிப்பிடத்தக்கது. எனவே கடந்த மார்ச் மாதத்தில் 3,431 ரூபாயக இருந்த ஒரு பேரல் 2,549 ஆக குறைந்தது. இது உலக நாடுகள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்டுத்தியது.
தற்போது கொரோனா தடுப்பு நடவடிக்கைக்காக கச்சா எண்ணெயின் தேவை குறைந்திருக்கிறது. இதைக் கருத்திக்கொண்டு ஒபேக் அமைப்பு தனது மொத்த உற்பத்தில் 10 விழுக்காடு குறைத்து உற்பத்தி செய்ய முடிவெடுத்திருக்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout