நமீதா காரை சோதனை செய்த தேர்தல் அதிகாரிகள்

  • IndiaGlitz, [Friday,March 29 2019]

ஒவ்வொரு தேர்தலின்போதும் தேர்தல் ஆணையத்தின் ஒரு பிரிவான பறக்கும் படை அதிகாரிகள் வாகன சோதனையில் ஈடுபடுவது வழக்கம். அந்த வகையில் கடந்த சில நாட்களாக தமிழகம் முழுவதும் வாகன சோதனையில் ஈடுபட்டு வரும் பறக்கும் படையினர் இதுவரை உரிய ஆவணங்கள் இல்லாத கோடிக்கணக்கான பணத்தையும் கிலோ கணக்கில் தங்க நகைகளையும் பறிமுதல் செய்துள்ளனர்.

இந்த நிலையில் நடிகை நமீதா தனது கணவர் மற்றும் நண்பர்களுடன் ஒரு சொகுசுக்காரில் ஏற்காடு சென்று கொண்டிருந்தார். அப்போது அவரை காரை நிறுத்திய பறக்கும் படையினர் அவரது காரில் சோதனை செய்ய வேண்டும் என தெரிவித்தனர். இதற்கு நமீதா தரப்பில் முதலில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. ஆனால் இது தேர்தல் ஆணையத்தின் உத்தரவு என அதிகாரிகள் விளக்கமளித்தவுடன் நமீதா சோதனைக்கு சம்மதித்தார்.

அவரது காரில் சோதனை செய்த அதிகாரிகள் அவரிடம் குறிப்பிடத்தக்க அளவுக்கு மேல் பணம், நகை இல்லாததால் அவரது கார் செல்ல அனுமதித்தனர். இதனையடுத்து நமீதா தனது கணவருடன் காரில் ஏற்காடு சென்றார். நமீதாவின் கார் சோதனை செய்யப்பட்ட செய்தி பெரும் பரபரப்புடன் வைரலாகி வருகிறது.
 

More News

புல்வாமா தாக்குதலை நடத்தியவர் பாரத பிரதமர்: பிரேமலதா உளறல்

அதிமுக கூட்டணியில் இணைந்து நான்கு தொகுதிகளை பெற்ற விஜயகாந்தின் தேமுதிக கட்சியின் பொருளாளர் பிரேமலதா கடந்த சில நாட்களாக தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம்  செய்து தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார்.

தேர்தல் ஆணையத்திடம் இருந்து தினகரனுக்கு கிடைத்த பரிசு!

இரட்டை இலை சின்னம், குக்கர் சின்னம் ஆகியவற்றுக்காக சட்டப்போராட்டம் நடத்தி தோல்வி அடைந்த தினகரனுக்கு கடைசியில் பொது சின்னமாவது கிடைக்குமா? என்ற நிலை இருந்தது.

ஓவியாவின் அடுத்த படத்தின் சென்சார் மற்றும் ரிலீஸ் தகவல்

நடிகை ஓவியா நடிப்பில் சமீபத்தில் வெளியான '90ml' திரைப்படம் 'ஏ' சான்றிதழை பெற்றதோடு கடும் விமர்சனத்தையும் பெற்றது. இந்த நிலையில் அவருடைய அடுத்த படத்திற்கு 'யூ' சான்றிதழ் கிடைத்துள்ளது

மக்களவை தொகுதியில் போட்டியிடும் பா.ஜ.க. வேட்பாளருக்கு 14 நாள் சிறை!

கேரளாவில் கோழிக்கோடு மக்களவை தொகுதியில் போட்டியிடும் பா.ஜ.க. வேட்பாளரை 14 நாள் காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

யார் கற்றப்பரம்பரை; யார் குற்றப்பரம்பரை? தமிழிசைக்கு கருணாஸ் கேள்வி

சமீபத்தில் பாஜக தமிழக தலைவரும், தூத்துகுடி தொகுதி வேட்பாளருமான தமிழிசை செளந்திரராஜன், 'குற்றப்பரம்பரை' குறித்து சர்ச்சைக்குரிய கருத்துக்களை தெரிவித்ததாக விமர்சனங்கள் எழுந்தன.