ஃபேஸ்புக்குடன் கூட்டணி வைத்தது தேர்தல் ஆணையம்

  • IndiaGlitz, [Tuesday,November 28 2017]

அரசியல் கட்சிகள் தான் தேர்தல் சமயத்தில் கூட்டணி வைப்பது வழக்கம். ஆனால் தற்போது தேர்தல் ஆணையமே உலகின் நம்பர் ஒன் சமூக வலைத்தளமான ஃபேஸ்புக்குடன் கூட்டணி வைத்துள்ளது. இதன் மூலம் 18 வயது பூர்த்தியானவர்கள் அனைவரும் வாக்காளர்களுக்காக படிவத்தில் பதிவு செய்ய ஞாபகப்படுத்தப்படும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

தற்போது ஃபேஸ்புக்கில் உள்ள பயனாளிகள் அனைவருக்கும் அவர்களுடைய பிறந்த நாளின்போது வாழ்த்துக்களை ஃபேஸ்புக் கூறி வருகின்றது. இந்த நிலையில் இனிமேல் 18 வயது பூர்த்தி ஆனவர்களுக்கு பிறந்த நாள் வாழ்த்து செய்தி அனுப்பும்போது, கூடவே புதிய வாக்காளர்களுக்கு பதிவு செய்ய அறிவுறுத்தும் வாசகங்களும் வரும். மேலும் தேர்தல் ஆணையத்தின் தேசிய வாக்காளர் பதிவு செய்யும் இணையதளத்தின் லிங்க்கும் அதில் இருக்கும். அந்த லிங்க்கை க்ளிக் செய்து 18 வயது பூர்த்தியான ஃபேஸ்புக் பயனாளிகள் புதிய வாக்காளர்களுக்கு பதிவு செய்து கொள்ளலாம்

இந்த சேவை தமிழ், ஆங்கிலம், இந்தி, குஜராத்தி, தெலுங்கு, மலையாளம், கன்னடம், பஞ்சாபி, பெங்காலி, உருது, அஸ்ஸாமி, மராத்தி மற்றும் ஒரியா என 13 மொழிகளில் வழங்கப்படும். இந்த புதிய முயற்சி மூலம் 18 வயது பூர்த்தியானவர்கள் அதிகளவில் வாக்காளர் பட்டியலில் இணைவார்கள் என்று தலைமை தேர்தல் ஆணையர் தெரிவித்துள்ளார். 

More News

விஜய், அஜித், சூர்யா குறித்து கார்த்தி கூறியது என்ன?

கார்த்தி நடித்த 'தீரன் அதிகாரம் ஒன்று' திரைப்படம் உலகம் முழுவதும் நல்ல வரவேற்பை பெற்று வசூலை அள்ளி கொண்டிருக்கின்றது. நடிகர் கார்த்திக்கு இந்த படம் ஒரு மைல்கல் என்றால் அது மிகையில்லை.

சுரேஷ் ரெய்னாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த சச்சின்

சுரேஷ் ரெய்னா நேற்று தனது 31வது பிறந்த நாளை கொண்டாடினார். அவருக்கு இந்திய அணி வீரர்களும், கிரிக்கெட் ரசிகர்களும் நேரிலும், சமூக வலைத்தளங்கள் மூலமும் வாழ்த்து தெரிவித்தனர்.

இசைப்புயலா? இளம் இசைப்புயலா? 'தளபதி 62' இசையமைப்பாளர் யார்?

தளபதி விஜய் நடித்த 'மெர்சல்' சூப்பர் ஹிட் வெற்றியை அடுத்து அவருடைய அடுத்த படமான 'தளபதி 62' திரைப்படம் வரும் ஜனவரியில் படப்பிடிப்பு தொடங்கவுள்ளதாக செய்திகள் வெளிவந்ததை ஏற்கனவே பார்த்தோம்.

சத்யம் சினிமா அதிபர் வீட்டில் வருமான வரி ரெய்டு

இன்று காலை சென்னை பெரம்பூரில் உள்ள சத்யம் S2 சினிமாஸ் தியேட்டர் அதிபர் வீடு மற்றும் அவருக்க்கு சொந்தமான இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை செய்து வருவதாக தகவல்கள் வெளிவந்துள்ளது

அன்புச்செழியன் மீதான புகார் வாபஸ்: கந்துவட்டி வழக்கில் திடீர் திருப்பம்

இயக்குனர், நடிகர் சசிகுமாரின் உறவினர் அசோக்குமார் தற்கொலைக்கு காரணமானவர் என்று குற்றம் சாட்டப்பட்டுள்ள பைனான்சியர் அன்புச்செழியனை காவல்துறையினர் தனிப்படை அமைத்து தேடி வருவது தெரிந்ததே.