திருவாரூர் இடைத்தேர்தல் ரத்து: தேர்தல் ஆணையம் அறிவிப்பு

  • IndiaGlitz, [Monday,January 07 2019]

முன்னாள் முதல்வர் மு.கருணாநிதி மறைவால் காலியாக இருந்த திருவாரூர் தொகுதிக்கு ஜனவரி 28ல் இடைத்தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்திருந்த நிலையில் சற்றுமுன் இந்த இடைத்தேர்தல் ரத்து செய்யப்படுவதாக தலைமை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் ஒன்றான திருவாரூர் தொகுதியில் தேர்தல் நடத்துவதால் நிவாரண பணிகள் பாதிக்கப்படுவதாக கிட்டத்தட்ட அனைத்து அரசியல் கட்சிகளும் கருத்து கூறியதை அடுத்து இந்த தேர்தல் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தெரிகிறது.

இந்த இடைத்தேர்தல் ரத்து குறித்து அரசியல் தலைவர்கள் கூறியதாவது:

தமிழிசை செளந்திரராஜன்: திருவாரூர் தொகுதியில் இடைத்தேர்தலை ரத்து செய்தது சரியான நடவடிக்கையே

பீட்டர் அல்போன்ஸ்: தேர்தல் ரத்து: காங்கிரஸ் வரவேற்பு திருவாரூரில் தேர்தல் ரத்து செய்யப்பட்டிருப்பதை வரவேற்கிறேன்; தேவையற்ற இடைத்தேர்தல்

தமிழக அமைச்சர் ஓ.எஸ்.மணியன்: திருவாரூர் தேர்தல் ரத்து செய்யப்பட்டது ஏமாற்றமளிக்கிறது

எஸ்.காமராஜ் அமமுக வேட்பாளர்: திருவாரூர் இடைத்தேர்தல் ரத்து செய்யப்பட்டிருப்பது அதிர்ச்சி அளிக்கிறது

 

More News

பிரகாஷ்ராஜ் முடிவுக்கு கமல்ஹாசன் வாழ்த்து

நடிகர் பிரகாஷ்ராஜ் வரும் பாராளுமன்ற தேர்தலில் பெங்களூர் மத்திய தொகுதியில் சுயேட்சையாக போட்டியிடுவதாக சமீபத்தில் அறிவித்துள்ளார்

தந்தைக்கு நெகிழ்ச்சியான பிறந்த நாள் வாழ்த்து கூறிய ஏ.ஆர்.அமீன்

ஆஸ்கார் நாயகன் ஏ.ஆர்.ரஹ்மான் இன்று தனது 52வது பிறந்த நாளை கொண்டாடி வருகிறார். அவருக்கு திரையுலகினர் இன்று காலை முதல் தொடர்ந்து பிறந்த நாள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

பெற்றோர்களுக்கு ஏ.ஆர்.முருகதாஸின் வேண்டுகோள்

தளபதி விஜய் நடித்த 'சர்கார்' படத்தை அடுத்து சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கவுள்ள படம் ஒன்றை இயக்குனர் முருகதாஸ் இயக்கவுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது.

ரஜினி-அஜித்: பாரீஸ் கிராண்ட் ரெக்ஸ் திரையரங்கில் யார் படம்?

கடந்த சில ஆண்டுகளாக தமிழ் படங்கள் ஐரோப்பா கண்டத்தின் மிகப்பெரிய திரையரங்கமான கிராண்ட் ரெக்ஸ் திரையரங்கில் திரையிடப்பட்டு வருகிறது.

பேட்ட-விஸ்வாசம் படங்களுடன் இணையும் உதயநிதி-நயன்தாரா படங்கள்

ஜனவரி 10ஆம் தேதி தலைவர் ரஜினியின் 'பேட்ட' மற்றும், 'தல' அஜித்தின் 'விஸ்வாசம் படங்கள் உலகம் முழுவதும் பிரமாண்டமாக வெளியாகவுள்ளது