திருவாரூர் இடைத்தேர்தல் ரத்து: தேர்தல் ஆணையம் அறிவிப்பு
Send us your feedback to audioarticles@vaarta.com
முன்னாள் முதல்வர் மு.கருணாநிதி மறைவால் காலியாக இருந்த திருவாரூர் தொகுதிக்கு ஜனவரி 28ல் இடைத்தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்திருந்த நிலையில் சற்றுமுன் இந்த இடைத்தேர்தல் ரத்து செய்யப்படுவதாக தலைமை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் ஒன்றான திருவாரூர் தொகுதியில் தேர்தல் நடத்துவதால் நிவாரண பணிகள் பாதிக்கப்படுவதாக கிட்டத்தட்ட அனைத்து அரசியல் கட்சிகளும் கருத்து கூறியதை அடுத்து இந்த தேர்தல் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தெரிகிறது.
இந்த இடைத்தேர்தல் ரத்து குறித்து அரசியல் தலைவர்கள் கூறியதாவது:
தமிழிசை செளந்திரராஜன்: திருவாரூர் தொகுதியில் இடைத்தேர்தலை ரத்து செய்தது சரியான நடவடிக்கையே
பீட்டர் அல்போன்ஸ்: தேர்தல் ரத்து: காங்கிரஸ் வரவேற்பு திருவாரூரில் தேர்தல் ரத்து செய்யப்பட்டிருப்பதை வரவேற்கிறேன்; தேவையற்ற இடைத்தேர்தல்
தமிழக அமைச்சர் ஓ.எஸ்.மணியன்: திருவாரூர் தேர்தல் ரத்து செய்யப்பட்டது ஏமாற்றமளிக்கிறது
எஸ்.காமராஜ் அமமுக வேட்பாளர்: திருவாரூர் இடைத்தேர்தல் ரத்து செய்யப்பட்டிருப்பது அதிர்ச்சி அளிக்கிறது
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout