நிவாரண பணியின்போது காயமடைந்த மின் ஊழியருக்கு அமைச்சர் செய்த உதவி
- IndiaGlitz, [Tuesday,November 20 2018]
கஜா புயலால் பாதிக்கப்பட்ட டெல்டா மாவட்டங்களில் ஆயிரக்கணக்கான மின்கம்பங்கள் கீழே சாய்ந்துவிட்டதால் பெரும்பாலான பகுதிகளில் மின்சார விநியோகம் பாதிக்கப்பட்டது. கிட்டத்தட்ட புதியதாக மின் இணைப்பு கொடுக்கும் அளவுக்கு அங்கு சீரமைப்பு பணிகள் நடந்து வருகிறது.
இந்த நிலையில் மின்சீரமைப்பு பணிகளில் நூற்றுக்கணக்கான மின்வாரிய ஊழியர்கள் இரவு பகலாக ஈடுபட்டுக் கொண்டு வரும் நிலையில் கீரனூர். மூகாம்பிகை கல்லூரி அருகில் உள்ள டிரான்ஸ்பார்மரில் மின்வாரிய ஊழியர்கள் சிலர் வேலை செய்து கொண்டிருந்தனர். அப்போது திடீரென எதிர்பாராத வகையில் மின்சாரம் தாக்கி ஒரு ஊழியர் கீழே விழுந்து மயக்கம் அடைந்தார்.
அந்த நேரத்தில் அந்த பகுதியில் மீட்புப்பணிகளை பார்வையிட்டு கொண்டிருந்த சுகாதாதர துறை அமைச்சர் விஜயபாஸ்கர் உடனடியாக நடவடிக்கை எடுத்து ஆம்புலன்ஸ் ஏற்பாடு செய்து திருச்சி அரசு மருத்துவமணைக்கு அனுப்பி வைத்தார். இந்த விபத்தால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏர்பட்டுள்ளது.