பிரசன்னாவின் குற்றச்சாட்டுக்கு மின்வாரியத்தின் விளக்கம்!

  • IndiaGlitz, [Wednesday,June 03 2020]

தமிழ்நாடு மின்சார வாரியத்தின் மின் கணக்கெடுப்பு குறித்து நடிகர் பிரச்சன்னா பதிவு செய்த டுவீட் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது என்பது தெரிந்ததே. அவர் ''இந்தக் கோவிட் லாக்டவுனுக்கு மத்தியில் தமிழ்நாடு மின்சார வாரியம் ஒரு கொள்ளையடிக்கும் செயலில் உற்சாகமாக ஈடுபட்டிருப்பதாக உங்களில் எத்தனை பேர் நினைக்கிறீர்கள்..?'' என தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்திருந்தார்.

இந்த நிலையில் நடிகர் பிரசன்னாவின் வீட்டில் மீண்டும் மின் கணக்கெடுப்பு எடுக்கப்படும் என்றும், தவறுகள் இருந்தால் திருத்தப்படும் என்றும் மின்வாரியம் ஏற்கனவே பதில் தெரிவித்திருந்தது. இந்த நிலையில் தற்போது நடிகர் பிரசன்னாவின் குற்றச்சாட்டுக்கு மின்வாரியம் பதில் அளித்துள்ளது. அதில் கூறியிருப்பதாவது:

இரண்டு மாதங்களுக்கு ஒருமுறையே மின்கட்டணம் கணக்கிடப்படுகிறது என்றும், நான்கு மாத மின்நுகர்வை இரண்டாக பிரித்து மின் கட்டணம் கணக்கிடப்படுகிறது என்றும் மின்வாரியம் பதில் அளித்துள்ளது. மேலும் நடிகர் பிரசன்னா மின்வாரியத்தை கடுஞ்சொற்களால் குற்றஞ்சாட்டுவது கண்டிக்கத்தக்கது என்றும் மின்வாரியம் தெரிவித்துள்ளது. மின்வாரியத்தின் இந்த பதிலுக்கு பிரசன்னா என்ன விளக்கம் அளிக்க போகிறார் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.