ஊரடங்கில் இருப்பதால் அதிகமாக சாப்பிடுகிறீர்களா??? அடிப்படைக் காரணம் என்ன??

  • IndiaGlitz, [Tuesday,April 28 2020]

 

கடந்த மூன்று மாதங்களாக கொரோனா வைரஸ் ஒட்டுமொத்த உலகத்தின் இயல்பு வாழ்க்கையையே புரட்டிப் போட்டிருக்கிறது. சமூக வலைத்தளங்கள், தொலைக்காட்சி ஊடகங்கள் என அனைத்திலும் கொரோனா பற்றிய தகவல்கள் மட்டுமே தொடர்ந்து பேசப்படுகிறது. இதன் தொடர் தாக்கம் மக்கள் மத்தியில் மன அழுத்தத்தையும் பயத்தையும் ஏற்படுத்தியிருப்பதாக உலகச் சுகாதார மையம் தெரிவித்துள்ளது. ஒருபக்கத்தில் அரசுகளும் நோய் பற்றிய பரவல், தாக்கம் குறித்து தொடர்ந்து எச்சரித்து வருவதால் மக்களுக்கு எதிர்மறையான கருத்துகள் தோன்றுவதற்கும் வாய்ப்பிருக்கிறது என மனநல வல்லுநர்கள் வருத்தம் தெரிவிக்கின்றனர். இவர்களின் கருத்துகளை மெய்ப்பிக்கும் பொருட்டு தற்போது கொரோனா அறிகுறிகள் ஏற்பட்ட பலர் அடுக்குமாடிகளில் இருந்து குதித்து தற்கொலை செய்துகொள்ளும் சம்பவங்களும் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், அதிகமாகச் சாப்பிடுவதும் அத்தகைய மன அழுத்தங்களில் ஒன்றுதான் என மனநல வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.

கொரோனா ஒருபக்கம் மக்களை கடுமையான வறுமைக்கு தள்ளியிருக்கிறது. இவர்களைத் தவிர தற்போது வீடுகளில் முடங்கியிருக்கும் நடுத்தர மற்றும் பொருளாதார வளர்ச்சிபெற்ற குடும்பங்களில் உள்ள பலரும் அதிகமாக சாப்பிடுவதாக தரவுகள் தெரியவருகிறது. அதுவும் தனியாக இருப்பவர்கள் மேலும் அதிகமாகச் சாப்பிடுவதாகத் தெரிவிக்கின்றனர். காரணம் வேலை எதுவும் இல்லாமல் வெறுமனே சாப்பிடுவதில் நேரத்தை செலவிடுவதாக நாம் நினைக்கலாம். வேலை எதுவுமில்லை என்ற காரணம் ஒருபக்கம் இருந்தாலும் திடீரென்று அதிகமாகச் சாப்பிடுவது இயல்புக்கு மீறியது எனவும் இது கடுமையான மன அழுத்தத்தின் தாக்கம் எனவும் தற்போது மனநல வல்லுநர்கள் கருத்துத் தெரிவித்து வருகின்றனர்.

கொரோனா வைரஸ் ஏற்படுத்தியிருக்கும் பயம், பதட்டம், எதிர்மறை கருத்துக்களால் பலர் தங்களது தூக்கத்தையும் இழந்து தவிப்பதாகக் கூறுகின்றனர். இதற்கு அடிப்படையான காரணம் இயல்பு வாழ்க்கையில் தோன்றும் குழப்பம், பதட்டம் போன்றவை அவர்களின் தூக்கத்தில் பிரதிபலித்து பலருக்கு கொடூரமான கனவுகளையும் வரவழைத்து விடுகிறது. வேலை எதுவும் இல்லாததால் பலரும் அதிகபடியான நேரத்தைத் தூங்குவதற்கு செலவிடுகின்றனர். அதிகபடியான தூக்கம் ஏற்கனவே உள்ள வாழ்க்கையின் அனுபவத்தை அல்லது பதட்டத்தை வெளிப்படுத்துவதற்கு போதுமான காரணியாக மாறி நீண்ட கனவுகளை வரவழைத்து விடுகிறது. கொரோனா தாக்கத்தினால் வாழ்க்கையின் போக்கே மாறி மக்களின் நோய் எதிர்ப்பு மண்டலங்களின் ஆற்றலையும் குறைத்து விடும் எனவும் சில மனநல வல்லுநர்கள் வருத்தம் தெரிவிக்கின்றனர். மனவலிமை குறைந்து பதட்டம், எரிச்சல், வாழக்கை பற்றிய பயம் போன்ற பல காரணிகள் மக்களைத் தற்போது அமைதியாகத் தாக்கி வருகிறது.

இத்தனை பதட்டத்தையும் மக்கள் தாம் செய்யும் வேலைகளில், அன்றாடப் பழக்கங்களில் வெளிப்படுத்தி வருகின்றனர். இந்தப் பதட்டம்தான் தற்போது அதிகபடியான சாப்பாட்டிற்கும் ஒருகாரணமாக இருக்கிறது. இதுகுறித்து கவலைக் கொள்ள வேண்டாம் எனவும் சில மனநல ஆலோசகர்கள் ஆதரவு தெரிவிக்கின்றனர். உடல் பருமன் போன்ற பிரச்சனைகளைப் பற்றி கவலைக்கொள்ள வேண்டாம், நாம் கடுமையான சூழலில் வாழ்ந்து வருகிறோம். இத்தகையத் தருணங்களில் மன நலத்தைப் பாதுகாப்பதே சிறந்தது எனவும் கூறுகின்றனர்.

More News

தமிழகத்தில் இன்று 121 கொரோனா பாசிட்டிவ்: சென்னையில் மட்டும் 103

தமிழகத்தில் தினந்தோறும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் குறித்த தகவலை தமிழக சுகாதாரத்துறை தெரிவித்து வரும் நிலையில் சற்றுமுன் இன்று தமிழகத்தில் 121 பேர் புதியதாக கொரோனா

பிரபல நடிகரின் கொரோனா தடுப்பு நிதியுதவி ரூ.30 கோடியாக உயர்வு!

பிரபல பாலிவுட் நடிகர் அக்சயகுமார் ஏற்கனவே கொரோனா தடுப்பு பணிகளுக்காக பிரதமர் நிவாரண நிதிக்கு 25 கோடி ரூபாய் வழங்கினார் என்பது தெரிந்ததே

டிஸ்னி ஹாட்ஸ்டாரில் 'லட்சுமி பாம்' படம்: அதிகாரபூர்வ அறிவிப்பு

கொரோனா பாதிப்பு காரணமாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக இந்தியாவில் உள்ள அனைத்து திரையரங்குகளும் மூடப்பட்டுள்ளன

விஜயகாந்தின் ஒரே ஒரு போன்கால்: அந்தமான் மீனவர்களுக்கு போய் சேர்ந்த உதவிகள்

அந்தமானில் தமிழக மீனவர்கள் ஊரடங்கு காரணமாக உணவு உள்பட அடிப்படை தேவைகள் கூட இல்லாமல் இருப்பதை அறிந்து விஜயகாந்த் அவர்களுக்கு உதவி செய்துள்ள தகவல் தற்போது வெளிவந்துள்ளது

கோயம்பேடு மார்க்கெட்டுக்கு பொதுமக்கள் வர தடை: தமிழக அரசின் அதிரடி முடிவு

கடந்த சில நாட்களாக கோயம்பேடு மார்க்கெட்டில் சமூக விலகலை கடைபிடிக்காததால் கொரோனா தொற்று சென்னையில் மிக அதிகமாகி வருவதாக செய்திகள் வெளிவந்துள்ளது.