சென்னையிலுள்ள அம்மா உணவகங்களில் இனிமேல் 3 வேளையும் இலவசமாகச் சாப்பிடலாம்!!!
Send us your feedback to audioarticles@vaarta.com
கொரோனா முடியும் வரை சென்னையிலுள்ள அனைத்து அம்மா உணவகங்களிலும் இலவசமாக சாப்பாடு வழங்கப்படும் என மாநகராட்சி நிர்வாகம் அறிவிப்பு வெளியிட்டு இருக்கிறது. கொரோனா ஊரடங்கில் பாதிக்கப்பட்டுள்ள மக்களின் உணவுத் தட்டுப்பாட்டை போக்குவதற்காக இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மாநகராட்சி நிர்வாகம் தெரிவித்து இருக்கிறது.
ஊரடங்கினால் பாதிக்கப்பட்டுள்ள தொழிலாளர்கள் அம்மா உணவகங்களில் இலவசமாக சாப்பாடு வழங்கும்படி அரசுக்கு கோரிக்கை வைத்து வந்தனர். இந்நிலையில் சென்னையிலுள்ள 407 அம்மா உணவகங்களிலும் இலவசமாக உணவு வழங்கப்படும் என மாநாகராட்சி நிர்வாகம் அறிவித்துள்ளது. இதற்கான செலவு தன்னார்வலர்களிடம் இருந்து பெறப்படும் எனவும் மாநகராட்சி நிர்வாகம் கூறியுள்ளது.
அம்மா உணவகங்களில் பணிபுரியும் சுயஉதவிக் குழுக்களின் உறுப்பினர்கள் இதற்கான நிதியை பெற்று உரிய வங்கி கணக்கில் செலுத்தும்படியும் அரசு அறிவுறுத்தியிருக்கிறது. சென்னையில் உள்ள 200 வார்டுகளிலும் தலா 2 அம்மா உணவகங்கள் இயங்குகின்றன. மேலும், சென்னை அரசு மருத்துமனைகளில் 7 உணவகங்கள் இயங்குகின்றன. சென்னை மாநகராட்சியில் மட்டும் சுமார் 1 லட்சத்து 30 ஆயிரம் பேர் நாளொன்றுக்கு சாப்பிட்டு வருவதாகக் கூறப்படுகிறது. எனவே ஒரு நாளைக்கு ரூ.17 லட்சம் ரூபாய் வரை அம்மா உணவகங்களின் இலவச சாப்பாட்டிற்கு தேவைப்படும் என மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Nithya Ramesh
Contact at support@indiaglitz.com
Comments